பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

என்ன? ஏன்? எப்படி?

பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று இயற்கையே அவர்கள் உடலமைப்பைப் படைத் திருக்கிறது இல்லையா? இந்தப் பத்தாம் பசலிக் கருத்து இனிச் செல்லுபடி யாகாது. இந்திராகாந்தி போன்ற ஆற்றல்மிக்க பெண் களைப் பார்த்த பிறகும் இக்கருத்தைக் கூறுபவர்கள், இன்னும் அறியாமையில் உழலுபவர்களே!

சுற்றந் தழுவுதல் ஓர் உயர்ந்த பண்பல்லவா? தான் உழைத்து ஈட்டிய செல்வத்தை வைத்துக் கொண்டு சுற்றத்தாருக்கு உதவி செய்வது உயர்ந்த பண்புதான். அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் பொது மக்களுக்குச் சொந்தமான பதவி, வாய்ப்பு ஆகியவற்றைத் தம் உறவினர்களுக்குப் பயன்படுத்துவது இழி பண்பாகும்.

ஒருவன் ஒரு முறை தவறுசெய்கிறான், அதைப் பலமுறை குத்திக்காட்டுவது நல்லதா? - நல்லது அல்ல: ஒரு முறை அல்லது இருமுறை சொன்னால் தவற்றையுணர்ந்து திருந்துவான். பலமுறை குத்திக் காட்டினால், தவற்றை யுணருவதற்குப் பதிலாக ஆத்திரக்காரனாக மாறிவிடுவான். மனம் எதிர்க் கதியில் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

கு குணம் உள்ளவர்களிடம் பணம் ஏன் சேரமாட்டேன்

என்கிறது? தங்கத்தைப் பூட்டி வைத்திருந்தால் அது வளராது; அதைப் பணமாக்கித் தொழில் செய்தால்தான் வளரும். அதுபோல் குணத்தை மட்டும் வைத்துக் கொண்டு இருந்தால் பணம் சேராது. திறமையைப் பயன்படுத்தி உழைக்கவேண்டும்! திருமகள் வருவாள்!