பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 85

சில குடும்பங்களில் ஆண்கள் பொறுப்பில்லாமல் இருப்ப தற்கு யார் காரணம்?

பொறுப்பை முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளும் பெண்களே காரணம்!

முத்தம் கொடுப்பது அன்பின் அடையாளம் தானே? இருக்கலாம். ஆனால், உங்கள் குழந்தைகளைப் பிறர் முத்தம் கொடுப்பதால் ஒருவருடைய எச்சில் இன்னொரு வருடைய முகத்தில் படுகிறது. எச்சிலில் நோய் உயிரிகள் கலந்திருக்கின்றன. ஒருவருடைய நோய் மற்றொரு வருக்குப் பரவ, இது வாய்ப்பளிக்கிறது.

உலகத்தில் குற்றஞ் செய்தவர்கள் மட்டுமா தண்டிக்கப் படுகிறார்கள்? உலகத்தில் குற்றஞ் செய்தவர்கள் எல்லாருமா தண்டிக்கப் படுகிறார்கள்?

மூத்த பெண் இருக்க இளையவளுக்குத் திருமணம் நடத்தலாமா?

நடத்தலாம். காதலில் இளையவள் முந்திக் கொண்டால்!

அந்தக் காலத்தில் பச்சை வாழை மட்டையால் அடுப் பெரித்த நல்ல தங்காளுக்கும், இந்தக் காலத்தில் கேஸ் அடுப்பில் வேலை செய்யும் பெண்களுக்கும் வேற்றுமை என்ன? வாழைமட்டையில் நெருப்புப் பிடிக்காது என்று தெரிந்தும் எரிக்க முற்பட்ட நல்லதங்காள் ஒரு மூடப் பெண்மணி. இன்றைய பெண்கள், எதையும் எளிதாக வும் விரைவாகவும் செய்து முடிக்கும் நாகரிக மணிகள்.