பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

என்ன? ஏன்? எப்படி?

நம் நாட்டில் கம்ப்யூட்டர் அ தி க ரி த் தால், வேலையில்லாப் பட்டதாரிகளின் நிலை என்ன? நம் நாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. பட்டதாரிகள் அந்த வேலைகளுக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாததால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. கம்ப்யூட்டர் கள் எத்தனை வந்தாலும் நம் நாட்டு வேலைகள் நடைபெறப் போவதில்லை.

டு பின் தூங்கி முன் எழும் பெண்களுக்கும் முன் துரங்கிப்

.

பின் எழும் பெண்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன? கடமையைக் கருத்தாய்ச் செய்பவர்கள் அவர்கள். உரிமையை முழுமையாய் அடைந்தவர்கள் இவர்கள்.

பெண்களால் ஆகாதது என்ன? ஆண்கள் ஆவது.

பெண்கள் வேலைக்குச் செல்வது நல்லதா? பெண்கள் வேலைக்குச் சென்று பணம் சேர்த்தால் தான் ஆண்பெண் என்ற ஏற்றத் தாழ்வு ஒழிந்து சம வாழ்வு பெறமுடியும். பெண் விடுதலைக்கு இது முதல்படி யாகும்.

சில டாக்டர்களுக்கு மருத்துவமே தெரியவில்லையே? இவர்கள் எப்படிப் பட்டம் பெற்றார்கள்? டாக்டர்கள் மட்டுமா? சில வக்கீல்களுக்கு வழக்காடவே தெரியவில்லை; சில தமிழாசிரியர்களுக்குத் தமிழே தெரியவில்லை; சில ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் தவறில்லாமல் எழுதத் தெரியவில்லையே!

சாதிகள் எப்போது ஒழியும் என்று நினைக்கிறீர்கள்?