பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை

Ο

37

தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே அரசாங்க உத் தியோகத் தில் சேரலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும். அப்போது அவர்களின் பொருளாதாரத்தகுதி உயரும். இயற்கையான கலப்பு மணங்கள் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தைகள் இன்ன சாதி என்று நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது சாதிகள் ஒன்ேறாடொன்று கலந்து எல்லாம் ஒரே சாதியாகிவிடும்.

கோபம் ஏன் உண்டாகிறது? - நமக்குப் பிடிக்காத ஒன்று நடந்தால் கோபம் உண்டாகிறது. குடும்பம் அல்லது சமுதாயமாகச் சேர்ந்து வாழும் மனிதன் கோபத்தை அடக்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றான்.

பெண்கள் நடுத்தெருவில் சைக்கிள் விடலாமா? சைக்கிள் விடுவதற்கு தெருவின் ஒரப்பகுதி ஒதுக்கப்பட் டிருக்கிறது. ஆகையால் நடுத்தெருவில் ஒட்டக்கூடாது!

வறுமை எப்போது ஒழியும்? நம் நாட்டிலா? ஆள வந்தவர்கள். இப்போது அதை வளர்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.

விலை ஏற்றத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? விலை ஏற்றம் என்பது ஏழையை ஏமாற்றும் ஒரு சதி! இந்தச்சதியில் அரசும் வணிகர்களும் பங்கு கொண்டவர் கள். இந்தக் கூட்டுச் சதி பாட்டாளி மக்களைப் படுகுழியில் தள்ளுகிறது.

சாதாரணமாகப் பேசும்போது நன்றாகப் பேசுபவர்கள், மேடை ஏறினால் நடுங்குகிறார்களே, ஏன்? மேடைக்கு என்று ஓர் இலக்கணம் வகுத்துக் கொண்

டிருக்கிறோம் நாம், மேன்டயில் முறையான கருத்துக்