பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 89

O

காதல் திருமணங்கள் தோல்வியடைவது ஏன்? இப்பொழுதெல்லாம் காதல் திருமணங்கள் வெற்றி யல்லவா அடைகின்றன? கலைஞர் மகன், இந்திரா மகன், போன்றவர்கள் காதல் பாதை கரடு முரடானது என்ற பழமொழியைப் பொய்யாக்கி விட்டார்களே.

இலட்சம் இலட்சமாகச் சம்பாதிப்பவர்கள் பலர் வருமானவரிப் பாக்கி வைப்பது ஏன்? பலர் வரும் பணத்தை முதலீட்டில் முடக்குவதால், வரி கட்டப் பணம் மிஞ்சாமல் போய் விடுகிறது. சிலர் வந்த பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிட்டு விடுவதால், வரிகட்ட முடியாமல் விழிக்கிறார்கள்.

மங்கையர் மலர்களை விரும்புவது ஏன்? மங்கையர் மலர்க் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கவிஞர்கள் கூறுகிறார்கள். தங்கள் ஒட்டுறவை வளர்த்துக் கொள்வதற்காக அளர்கள் மலர்களை விரும்பிச் சூடுகிறார்கள். சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? அர்த்தமில்லாத சடங்குகளையும், மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் உதறித் தள்ளி விட்டு, மணமக்கள் மாலைமாற்றிக் கொள்வது, அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது என்ற ஒரு அடையாளச் சடங்கை மட்டும் கையாண்டு செய்து கொள்வதே சுயமரியாதைத் திருமணம் எனப்படுகிறது. சுயமரியாதைக்காரராகிய பெரியார், சாமியார்களைப் போல் ஏன் தாடி வளர்த்தார்? சிக்கனம்தான் காரணம். பெரியார் தீவிர சிக்கனக்காரர் என்பது தெரிந்ததே. மழிப்பதால் உண்டாகும்செலவைத்