பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 93

உண்டு, பகல் தூக்கம் உங்களைச் சோம்பேறியாக்கி விடும். தூக்கம் வரக்கூடிய நேரத்தில் ஏதாவது உடல் உழைப்பு வேலை மேற்கொண்டால், பகல் துரக்கத்தை முறியடிக்கலாம். எழுத்துப் பணி புரிபவர்களுக்குத்தான் பகல் துரக்கம் வரும்.

காதல் வாழ்வு சிறந்ததா? காதல் இல்லாத திருமண வாழ்வு சிறந்ததா? அறிவுடையவன் எந்த வாழ்வையும் சிறந்ததாக்கிக் கொள்கிறான்; வாழ்வில் வெற்றி பெறுகிறான். அறிவில்லாதவன் எந்த வாழ்வு வாழ்ந்தாலும் தோல்வியே காணுகின்றான்.

இன்பமே துன்பமாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தருவீரா? - திருமண வீட்டில் பன்னீர் தெளிக்கிறார்கள். அந்தப் பன்னிர்த்துளியில் ஒன்று கண்ணில் தெறித்து விடுகிறது. உடனே கண்ணில் எரிச்சல்ஏற்படுகிறது. இனியதாயினும் பன்னீர் எரிச்சல் உண்டாக்குகிறதே! இது போலத்தான் சில நேரங்களில் இன்பம் என்று கருதுபவை துன்பமாய் முடிகின்றன. இலவசக் கல்வித் திட்டத்தால்தான் மாணவர்கள் பொறுப்பற்று நடக்கிறார்கள் இல்லையா? இலவசக் கல்வித் திட்டத்தை அரைகுறையாகச் செயற்படுத்துவதால் வந்த வினை இது. இலவசக்கல்வித் திட்டம் கட்டாயக் கல்வித் திட்டமாகவும் வரவேண்டும். சிறுவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் இருப்பது போல, பள்ளியிறுதி வகுப்பு வரை படித்துத் தேறாதவர்களை எந்த வேலையிலும் சேர்க்கக் கூடாதென்ற சட்டம் இருக்க வேண்டும்.