பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு 7-2-1902 : சங்கரநயினார் கோயிலில் ஞானமுத்தர் பரிபூரணத்தம்மையார் ஆகிய பெற்றோருக்குக் கடைக்குட்டிப் பத்தாம் மகவாகத் 'தேவநேசன்' பிறப்பு. 1918 : பாளையங்கோட்டைத் திருச்சவை விடையூழிய (CMS) உயர் நிலைப்பள்ளியில் பயின்று பள்ளியிறுதித்தேர்வில் தேர்ச்சி பெறல். பின்னர் முகவை மாவட்டச் சீயோன் மலை உயர் தொடக்கப் பள்ளி - யில் ஆசிரியராதல். 1921 : ஆசிரியர் பண்டிதர் மாசிலா மணி அவர்களால் 'தேவ நேசக் கவிவாணன்' என்ற பாராட்டுப் பரிந்துரையுடன் தமிழாசிரியப் பணியை மேற்கொள்ளல். 1921 முதல் 1944 வரை பணி புரிர்த இடங்கள். 1. வடார்க்காட்டு ஆம்பூர் உயர்நிலைப்பள்ளி. 2. சென்னைக் கிறித்தவக் கலாசாலை. 3. மன்னார்குடிப் பின்லே ' கல்லூரி. 4. திருச்சி பிசப்பு ஈபர் உயர்நிலைப்பள்ளி. 5. சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளி . 1924 : மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வில் வெற்றி பெறல். 1926 : தென்னிந்தியத் தமிழ்ச்சங்கப் 'புலவர்' தேர். வில் வெற்றி பெறல். பின்னர் சென்னைப் பல்கலைக் கழக 'வித்துவான்' கீ. க. தே (BO.L)