பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 27-10-1963 : மனைவியார் நேசமணி அம்மையார் மறைவால் பாவாணர் வடக்கிருக்கத் துணிதல். நண்பர்கள் பலரும் சூழ்ந்து தடுத்துத் தமிழாய் வுப் பணியில் ஈடுபட்டுத் தமிழை உய்விக்குமாறு வேண்டிய வேண்டுகைக்கு இசைதல், 1968: உலகத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தல், உ.த.க. தொண்டர்களுக்கான பண்புகளாக எளிமை, உண்மை, தன்னலமின்மை, தொண்டு, ஈகம் ஆகியவற்றை வலியுறுத்தல். 1974 : செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியமர்தல். 15-1-81 : மதுரையில் மாரடைப்பால் பேராவியற்கை எய்துதல், இல்லறமும் மக்கட்பேறும் பாவாணர் தம் ஐந்தாம் அகவையிலேயே பெற்றோர் இருவரையும் இழந்து விட்டாராதலால் அவருக்கு அன்னையாக இருந்து காத்தவர் அவர் தம் தமக்கையார். அவர் மணமுடித்து வைத்த எசுதர் அம்மையார் ஓர் ஆண் மகவை ஈன்றார். அம்மகவுக்கு மணவாளதாசன் என்று பெயர் சூட்டப்பட்டது சில திங்களில் அவ் அம்மையார் மறையவே தம் தமக்கையார் மகளாகிய நேசமணியம் மையாரைப் பாவாணர் மணந்து கொண்டார். அவர்கட்கு மக்கள் பின் கண்டவாறு ஐவர். 1. நச்சினார்க்கினிய நம்பி. 2. சிலுவையை வென்ற செல்வராயன். 3. அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்