பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 11 4. மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி. 5. மணிமன்ற வாணன். பாவாணர் பெற்ற பட்டங்கள் 1. 1921 இல் அவர் தம் ஆசிரியர் கவிவாணன்' என்று அவரைப் பாராட்டியதைப் பின்னர்த் தனித்தமிழாக் கிப் பாவாணர் என்று தம் பெயருடன் சேர்த்துக் கொண்டார். அதுவே இயற்பெயராகிய 'தேவ நேயன்' என்பதினும் பெரிதாய்ப் பரவி நின்றது. 2. 1947 இல் பாவாணருக்கும் தமிழ்மறவர் புலவர் பொன்னம்பலனார்க்கும் தந்தை பெரியார்வெள்ளிப் பட்டயம் அளித்துப் பாராட்டினார். 3. 1971 இல் பறம்புமலைப் பாரி விழாவில் குன்றக்குடி அடிகளார் பாவாணருக்குச் செந்தமிழ் ஞாயிறு' என்று பட்டம் அளித்துப் போற்றினார். 4. 1980 இல் தமிழக அரசு பாவாணருக்குச் 'செந்த மிழ்ச்செல்வர்' என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 5. பாவாணர் அன்பர்கள் பெயரேதுமின்றி 'ஐயா என்று குறிப்பின் அது பாவாணர் ஒருவரையே சுட்டுவதாக அமைந்தது. 'மொழிப்பேரறிஞர் தனித் தமிழ்க்காவலர்' 'மொழி நூற்கதிரவன்' 'மொழி நூன் மூதறிஞர்' 'மொழிஞாயிறு' முதலான பல பட்டங்கள் பாவாணர் அன்பர்களிடையே வழங்குகின்றன.