பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வடநூல் அடிப்படையினவென்றும், இனி. முழுப் பூசனிக் காயைச் சோற்றில் முழுக்குவது போலத் தமிழ் என்னும் பெயரே திரவிடம் என்பதன் திரிபென்றும், பரவெளி ஆராய்ச்சி மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும் நெஞ்சழுத்தங்கொண்டு நாக்கடிப்பாக வாய்ப்பறையறைவதும், மொழி நூற் பெயரில் வெளியிடுவதுமாயிருப்பதால், வையாபுரி வழி யினரும் மறைமலையடிகள் வழியினருமா கத் தமிழ்ப் புலவரும் தமிழாசிரியரும் இருவகையர். ஆலைத் தொழில் முதல் அரசியல் வரை எல்லாத் துறைகளிலும் ஆரியம் வேரூன்றியிருப்பதால், தமிழின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்தற்கும் காத்தற்கும், நுண்மதி, தமிழாங்கிலப் புலமை, ஆய்வுத் திறன், நடு நிலை, அஞ்சாமை, தன்னலமின்மை ஆகிய அறுதிறம் இன்றியமையாது வேண்டும். இவ்வாறும் தவத்திரு மறைமலையடிகளிடம் நிறைவுறவிருந்தன. அதனால், தமிழ்ப் புலமையில் பனிமலை போல் தனிமலையாக இருந் தாரேனும், அவர்கட்கு உறைவுக் காலத்திலும் மறைவுக் காலத்திலும் வேத்தியலாராலும் பொதுவியலாராலும் பாராட்டுமில்லை, பரிசுமில்லை, இந்நிலைமையே அவர் வழியினருக்கும், ஆரியச் சார்பான எக்கல்வி நிலையத் திலும் அவர்க்கு அலுவலுமில்லை ; சொற்பொழிவு வாய்ப்புமில்லை. யான் ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும், இருபத்தீராண்டு உயர் நிலைப்பள்ளிகளிலும், பன்னீராண்டு கல் லூரியிலும், தமிழாசிரியனாகப் பணியாற்றினேன், இவற் றுள் உயர்நிலைப்பள்ளியிரண்டு. கல்லூரி ஒன்றும் ஆக முக்கல்வி நிலையங்களே கிறித்தவ மதச் சார்பற்றவை. ஏனையவெல்லாம் கிறித்தவக் கல்வி நிலையங்களா தலின், அவற்றில் எளிதாய் எனக்கு வேலை கிடைத்தது.