பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 உயர் நிலைப்பள்ளியிரண்டனுள், முதலது பிரம்பூர்க்கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி; இரண்டாவது சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி. முதல தில் வேலை கிடைத்தற்குக் கரணியம், பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர் பெற்ற அறுவையரும். (Surgeon) பிராமணருமான காலஞ்சென்ற பண்டகர் (Dr.) மல்லையா வின் பரிந்துரையே. மேலும், அக்காலத்தில் என் மொழியாராய்ச்சி அரும்பியிருந்ததேயன்றி மலர்ந்திலது. இரண் டாவதில், பண்டாரகர் (Dr.) அரசமாணிக்கனாரின் பரிந் துரையும், தமிழ்ப் பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப்பற்றும், அற்றைப் பள்ளியாளுங் கணத்தாரின் தமிழவுணர்ச்சியுமே கரணியம். கல்லூரி, சேலத்து அற்றை நகராட்சிக் கல்லூரி, அதில் முன்பு தலைமைத் தமிழாசிரியப் பதவியும் பின்பு தமிழ்ப் பேராசிரியப் பதவியும், ஈடும் எடுப்புமற்ற உயர் திரு. இராமசாமி அவர்களின் தமிழார்வத்தாலும், நகராட் சித் தலைவர் திரு. இரத்தினசாமி அவர்களின் தமிழ்ப் பண் பாட்டாலும், நகராட்சித் தலைவர் திரு. இராமலிங்கனார் அவர்களின் தமிழ்ப் பற்றாலும் எனக்குக் கிட்டின. தமிழ் நாட்டில் தமிழரையே முதல்வராகக் கொண்ட எத்தஇனயோ கல்லூரிகளிருந்தும் சேலங் கல்லூரி ஒன்றி லேயே எனக்கு வேலைகிடைத்ததும், அங்குப் பன்னீ ராண்டு பணியாற்றியும் இன்று சொற்பொழிவாற்றவும் எனக்கதில் இடமில்லாதிருப்பதும், பேராசிரியர் இராமசாமியார் அவர்கள் தமிழ்ப்பற்றின் பேரெல்லையை உணர்த்துகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகமாயிருந்தும் அதில் தமிழ் சரியாய்ப் பேணவும் கவனிக்கவும் பெறாமையால், தமிழ் மொழியிலக்கியப்