பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 பண்பாட்டைத் தகுந்த முறையில் வளர்ப்பதையும், உலக முழுதும் பரப்புவதையுமே சிறந்த குறிக்கோளா கக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலஞ்சென்ற அரசவயவர் அண்ணாமலையார் அவர்களின் அரு முயற்சியால், 1929-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்ற தென்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், கால் நூற்றாண்டிற்கும் மேற்பட அஃது எனக்கு அண்ணாமலை யாகவே இருந்தது. அதில், தமிழ் ஆராய்ச்சித்துறை ஏற்பட்டபொழுது துறைத் தலைவரைத் தெரிந்தெடுத்தமைத்தற்குப் பல்கலைக் கழக அதிகாரிகள் முப்பெயர்ப் பட்டி யொன்றை வேண்டியதாகவும், அவ் வேண்டுகோட் கிணங்கி என் பெயர் உள்ளிட்ட ஒன்றைத் தாங்கள் விடுத்ததாகவும் தவத்திரு மறைமலையடிகள் என்னிடம் சொன்னார்கள். அதற்கேற்ப, பண்டாரகர் (Dr.) மணவாள இராமானுசம் அவர்கள் அப் பல்கலைக்கழகத் துணைக் கண் காணகராயிருந்தபொழுது, சேலம் நகராட்சிக் கல்லூரிச் சம்பளத்திற்குமேல் ஈராட்டைக் கூடுதல் தருவ தாகக் கூறி என்னை அப்பதவிக்கு அழைத்தார்கள். எனக்கு அப் பல்கலைக் கழகத்தின் அற்றை நிலை முற்றும் ஏற்றதாயிருந்ததேனும், வட மொழி வெறியர் ஒருவர் அதற்குத் துணைக் கண்காணகராய் வரக் கூடிய பிற்றை நிலை நோக்கி அப் பதவியளிப்பை ஏற்கவில்லை. நான் அஞ்சியவாறே நேரவுஞ் செய்தது. ஆயினும், ஒரு பல்கலைக் கழகத்திற்குத் தாவக்கூடிய அளவு பேராசிரியர் இராமசாமியார் அவர்களால் உயர்த்தப் பெற்றிருந்த என் நிலைமையெண்ணி மகிழ்ந்தேன். 1956 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை சூன் மீ ஏற்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர் முதலில்