பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 அமர்த்தப்பெறுவாரென்றும், முதற்கண் மேற்கொள்ளும் பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி (அகராதி)த் தொகுப்பு என்றும், செய்தித்தாட்களில் வெளியான விளம்பரம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் வேர்ச் சொல் அகரமுதலி என்னை யன்றி வேறெவராலும் தொகுக்க முடியாதாதலானும், என் உற்ற நண்பர் தூண்டுதலானும், ஊக்கங் கொண்டு, துணைப் பேராசிரியப் பதவியினின்று நாளடைவில் பே ரா சிரியப் பதவிக்கு உயரலாமென்னும் நம்பிக்கையுடன், அப்பதவிக்கு வேண்டுகோள் விடுக்கத்துணிந்தேன். இதற்கிடையில், சேலங் கல்லூரி இராமசாமி அவர்கள் மாணவர் விடுதியைத் திறந்துவைக்க அரச வயவர், முத்தையா அவர்கள் சேலம் வந்திருந்தார்கள்; அவ்வமயம், சேலங்கல்லூரி முதல்வர் பேரா. அச்சுதரும், பேரா. சொக்கப்பாவும், பேரா. கோவிந் தராசனாரும் என் தகுதியைப்பற்றி (அ. ம. ப. க. க.இணைக் கண்காணகர்) அரசவயவர் முத்தையா அவர்களிடம் சிறப்பாய் எடுத்துக் கூறினார்கள். திரு. முத்தையா அவர்களும் வேண்டுகோள் விடுக்கச் சொன்னதுமன்றி, அ ம. ப. க. க. பட்டமளிப்பு விழாவிற்கும் என்னைச் சிறப்பு விருந்தினனாக வரவழைத்தார்கள். - இதையடுத்து, மதுரைத் தியாகராசர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பண்டாரகர் அரசமாணிக்கனாரும் துணைத் தமிழ்ப் பேராசிரியர் ஒளவை சு. துரை சாமி அவர்களும் எனக்காக அ. ம.ப. க. க. இணைக் கண்காணகர்க்கும் துணைக் கண்காணகர்க்கும் பரிந்தெழுதி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் அப் ப. க. க. பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்த பொழுது துணைக் காணகர் திரு. T. M. நாராயணசாமி