பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 பெறுமாறு, ஓராண்டிற்கு நான் ஆய்வு நிலையில் அமர்த் தப்பட்டிருப்பதாகவும், தமிழாராய்ச்சித்துறைத் தலைவரி டம் சென்று வேலையை ஒப்புக்கொள்ளும்படியும் குறித் திருந்தது. அதையடுத்து 6-7-1956 என்னும் பக்கலிட்டு வந்த திருமுகத்தில், நான் பதிவாளரிடம் சென்று வேலையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், மொழிநூல் துறைத் தலைவராகப் பேராசிரியர் ஒருவர் அமர்த்தப் பெறுவா ரென்றும், அத்துறை வேலையை வழிப்படுத்தப் பெயர் பெற்ற தமிழறிஞரைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப் பெறுமென்றும், குறித்திருந்தது. யார் யார் அக்குழு வுறுப்பினர் என்பது அன்று தெரிந்திலது. ஆயினும் ஒரு சிலரை உய்த்தறிந்து கொண்டேன். -எனக்கு அ.ம.ப.க. க. வேலையமர்த்தம் கல்வியாண்டு தொடங்கியபின் ஆனதினால், பள்ளிகளிற் சேர்ந்து படித் துக்கொண்டிருந்த என் மக்களை உடன் கொண்டு செல்ல வியலாமல், அண்ணாமலை நகருக்குத் தனித்தே செல்ல நேர்ந்தது. சேலம் நகராண்மைக் கல்லூரியினின்று விடுவிப்புப் பெறச் சின்னாட் சென்று விட்டமையால், 12-7-56 அன்றே அ. ம. ப. க. க. வேலையை ஒப்புக் கொள்ள இயன்றது. அண்ணாமலை நகர் சென்றவுடன் பல்கலைக்கழக வீடு எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வாய்ப்பு, பேராசிரியர், துணைப்பேராசிரியர், விரிவுரையாளர் ஆகிய முத்திறத்தார்க்கும், முறையே, தலையிடை கடை யாம். எனினும், துணைக் கண்காணகர் திரு. நாராயண சாமியார் கண்ணோட்டத்தாலும் பதிவாளர் அன்பாலும், விருந்தினர் விடுதியில் எனக்கு ஏந்தான (வசதியான) இடங் கிடைத்தது. அதோடு ஒரு கிழமைக்குள், கொற் ஓவன்குடி விரிவுரையாளர் குடியிருப்பு வரிசையில்