பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 சொற்கள் நயம், நேர்மை என்பன, குமார் என்பது குமரன் (= முருகன்) என்னும் தென் சொல்லின் திரிபே. ஆயின், முருகன் ஆரியத்தெய்வம் என்பது, முருகன் என்பது சுப்ரமணியன் என்னும் வடசொல்லின் மொழி பெயர்ப்பென்பதும் அவர் நம்பிக்கை. தமிழை ஆங்கில வாயிலாய்க் கற்றதினால், சில தமிழ் நூற்பெயர்களைக்கூட அவர் சரியாய் ஒலிப்பதில்லை. பத்துப்பாட்டு என்பதைப் பத்துப்பத்து என்று அண்ணாமலை நகரில் ஒரு முறை படித்தார். வேறிடங்களில் பட்பட் என்றும் பட்டுப்பட்டு என்றும் படித்ததாகக் கேள்வி. தொடக்கக் கூட்டத்திற்கு மறுநாட்காலை குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிற்பின்வருமாறு முடிவுகள் செய்யப்பட்டன. 1) பரோ என்னும் ஆங்கிலப் பேராசிரியரையா வது, மெனோ என்னும் அமெரிக்கப் பேராசிரி யரையாவது அ.ம.ப.க. மொழிநூல் துறைப் பேராசிரியராக அமைத்தல் வேண்டும். 2) வாசகராகவிருக்கும் ஞா. தேவநேயனார் தாம் தொகுக்கவிருக்கும் தமிழ்ச்சொற் பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, முதற்கண் யாவேனும் ஐம்பது சொற்கட்கு எழுதிக் காட் டல் வேண்டும். அதற்குக் கையாளும் நெறி முறைகளையும் குறிப்பிடல் வேண்டும். 31 தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரை யாளரை அமர்த்தல் வேண்டும். 4) கழக (சங்க) இலக்கியத்தை ஒவ்வொரு நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வரிபெயர்த்