பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 | யும் அறியாத என் எதிரிகள், என்னைத் தம்வழித் திருப்பு மாறு, துணைக்கண்காணகர் திரு. நாராயணசாமியார் அவர்களிடம் சென்று, என்னை மேற்குறித்த வேனிற் மொழியியற் பள்ளிக்குப் பயிற்சிபெற அனுப்ப வேண்டு மென்று வேண்டியதாகத் தெரிகின்றது. துணைக் கண் காணகரும் என் விருப்பத்தை வினவினார்கள். இறைவ னருளால், அற்றைப் பள்ளி தேராதூனில் (Dehra Dun) நடைபெற்றது. பல்வகைப் பயனையும் முன்னோக்கிப் பெருமகிழ்ச்சியுடன் உடனே இசைந்தேன். பின்பு, இரு திசை வழிச்செலவிற்கும் ஒன்றரை மாதத் தங்கற்கும் பல்கலைக் கழகத்திற் பணம் பெற்றுக் கொண்டு, தேராதூன் சென்றேன். பல்வேறு நாட்டி னரும் பல்வேறு மொழியினரும் பல்வேறு மதத்தினரும் பல்வேறு இனத்தினரும் பல் வேறு குலத்தினருமான ஆசிரியரும் மாணவரும், அங்கு ஒன்று கூடி உடன் பிறப்புப்போற் பழ கியது மிக்க மகிழ்ச்சியைத் தந்து கிளர்ச்சியை உண்டு பண்ணியது. வண்ணனை மொழியியல் என்ன வென்பது ஏற் கனவே அறிஞர் கிளீசன் எழுதிய வண்ணனை மொழி யியற் புகுநூல் (An Introduction to Descriptive Linguistics) வாயிலாய் அறிந்திருந்தேனெனினும், அதன் முழுப்பரப்பையும் பயிற்சி முறையையும் தேரா தூன் பள் ளியில் தான் தெளிவாகக் கண்டேன், கடவை (Course) யிறுதியில் நிகழ்ந்த தேர்விலும் தேறினேன். ஆயின், அஃது எனக்கும் உண்மையான மொழிநூற்கும் பயன்படு வதன்று. வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழி வழக்கும், ஆக்ரா (Agra) தில்லி (Delhi)க் காட்சி களும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே, இவ் வுலகில் எனக்கு என்றும் பயன் தரும். இதுபற்றி என் எதிரிகட்கும் நன்றிகூறும் கடப்பாடுடையேன்.