பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறியப் படுகின்றது. ஆகையால், விட்டுணுவை மால் அல்லது மாயோனிலும், குமாரனை முருகன் அல்லது சேயோனிலும், துர்க்கையைக் கொற்றவையிலும், வேறு சில தேவரையும் தேவியரையும் தென்னிந்தியாவில் வழங்கும் அவரின் புதுப் பெயர்களிலும் கண்டு மகிழ்ந் தேன். கருத்துலகும் சமயக் காட்சியுலகும் முற்றும் ஒத் திருந்தன. இவை சமற்கிருத இலக்கணத்திற்போல் பிராமண இந்து மதத்தையும், தழுவியவை. இவற்றிற்கு வேதங்கள் அடிப்படை. இவற்றைச் சார்ந்தவை வேள்வி யும் தீ வளர்ப்பும், மலர்ப் பூசையும் தெய்வ வழிபாடும், நாற்பெருங் குலமும் நால்வகை வாழ்க்கை நிலையும் பற்றிய பிராமணக் கருத்துக்களும் ஆகும். இந் நாற்குலமும் நால் வகை நிலையும் பண்டைத் தமிழகத்தாரால் ஒப்புக்கொள் ளப்பட்டிருந்தன. ஒரு கால், வட இந்தியாவிற்போல் அவை அடைந்த வளர்ச்சியில் அவரின் ஒத்தாசையும் பெற்றிருக்கலாம். இனி அவற்றொடு சமண புத்த மதங் களும் தமிழகத்திருந்தன. வினையும் (கர்ம] உலக வாழ்க் கையும் (ஸம்ஸார பற்றிய பொதுவான பட்டாங்கு நூற் கருத்துக்களும் [திருவள்ளுவரின் உடன் பிறப்பாட்டிய ரான ஒளவையாரால் ஒரு பெரு வழக்கான வெண்பாவில் மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் இயல் வரையறுக்கப் பட்ட) அறம் பொருளின்பம் வீடு (தர்மார்த்த காம மோக்ஷ] என்னும் நாற்பால் (சதுர்வர்க்க) பற்றிய ஏடல் களும், வேறுபல அனைத்திந்தியக் கருத்துக்களும் அங் குள்ளன. இந்தியாவின் தலை சிறந்த செவியறிவுறூஉச் செய்யுளான திருக்குறள் முப்பாலை (திரிவர்க்க) மட்டும் எடுத்துக் கூறியது, தக்கதே என்று எனக்குப்பட்டது. அதன் ஆசிரியரான பேரறிவர் தம் அறிவுடைமையால், நாலாம் பாலாகிய வீட்டைப்பற்றிக் கூறாது, அதுபற்றிய கருத்தை, காணப்படாத மெய்ப்பொருளை அவரவர் அடையும் வழிக்கேற்பத் தனிப்பட்டவர்க்கு விட்டு