பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

45 தமிழிற் பெண்பால் காட்டும் சறு வடமொழி வரு முன் இல்லையாம். ஸ்த்ரீ என்னும் பெயர், வண்ணான், தட்டான் முதலிய பெயர்களோடு சேர்ந்து, வண்ணான் + ஸ்த்ரீ = வண்ணாத்தி, தட்டான்+ஸ்த்ரீ = தட்டாத்தி என் றானதாம். இதைத் தமிழ் பயிலும் கடை மாணவர்கூடக் கடிந்து சினப்பரே! முருகன் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தூய தமிழ்த் தெய்வமென்பது வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றவும், சுப்பிரமணியன் என்பதைத் தமிழர் முருகன் என்று மொழி பெயர்த்துக் கொண்டனரென்று பர். சட்டர்சி கூறியிருக்கின்றார். அதை ஒருவரும் எதிர்க்கா ததினாலேயே, அண்மையிற் பேரா. நீலகண்ட சாத்திரி யார் முருகன் ஆரியத் தெய்வமென்று கூறமுனைந்திருக் கின்றார். ஸகஸ்ர என்பது ஆயிரம் என்றும், பிராமண என் பது பார்ப்பான் என்றும், கன்யகா என்பது கண்ணகி என்றும், ஸ்தூணா என்பது தூண் என்றும், லோக என் பது உலகம் என்றும், த்ரோணீ என்பது தோணி என் றும், ஸ்நேக என்பது நேயம் என்றும் திரிந்தனவென் றும்; விஷ்ணு, குமார, துர்கா என்பவற்றை, முறையே, மால் அல்லது மாயோன், முருகன் அல்லது சேயோன், கொற்றவை என்றும் திரிவர்க என்பதை முப்பால் என் றும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பவற்றை அறம், பொருள், இன்பம், வீடு என்றும், தமிழர் மொழிபெயர்த் துக் கொண்டனரென்றும், அவர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும், கலவை மொழியாரும் கலவை இனத் தாரும் கலவை நாகரிகருமாவார் என்றும்; கூறிய பின் தமிழ் என ஒரு மொழி உளதோ? தமிழன் என ஓர் இனவன் உளனோ? தமிழாசிரியரும் தமிழ் மாணவரும் தமிழன்பரும் கருதிக் காண்க. கனை