பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48| எனக்குத் தெரிந்து விட்டது. பேரா. லெ. பெ. கரு இராமநாதன் அவர்கள் என்பாலுள்ள அன்பால், நான் பர். சட்டர் சிக்குக் காட்டவேண்டிய போலிகைச் சொற் பட்டியில், எள்ளளவும் கருத்து வேறு பாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தருக்கத்திற்கும் இடந்தராத ஐம்பது சொற்களையே சேர்க்கவேண்டுமென்று அறிவுரை கூறினார்கள். ஆயின், நான் அஃதை ஏற்றுக் கொண்டி லேன். தமிழைப்பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சவேண்டும்? இங்ஙனம் எத்தனை நாளைக்கு அஞ்சியஞ்சி அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் தமிழன் மூழ்கிக்கிடப்பது! ஆரியச்சார்பினர் கருங்காக் கையை வெண்காக்கையென்று எத்தனை துணிச் சலோடும் திடாரிக்கத்தோடும் கூறிவருகின்றனர்! அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திராவிடமொழி நூல் துறைத் திறப்பு விழாவிற்குப்பின், பர். காட்டிரே நெடுகலும் என்னைப் பற்றித் தீதாய்ப் பல்கலைக் கழக அதிகாரிகட்கு எழுதி வந்ததும், என் செவிக்கெட்டிற்று. துணைக்கண்காணகர் திரு. நாராயணசாமியார் அவர் களும், பல்கலைக்கழகப் பொதுக் கூட்டங்களில், அமெரிக்கா சென்றிருக்கும் திரு. சண்முகனார் பயிற்சி முடிந்து திரும்பிவர் தபின் திராவிட மொழிநூல் துறை மிகச்சீர்ப்படும் என்று சொல்வது வழக்கம். எனக்குத் திரு. சண்முகனாரைப் பற்றி ஒரு வருந்தமுமில்லை. அவரு டைய பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரே தமிழைச் சரியாய் அறியாதிருக்கும் போது, அவர் மாண வர் போன்றாரைப்பற்றி என் சொல்லக்கிடக்கின்றது! Some பர். சட்டர்சி பேரா. சேது விடம் என்னைப்பற்றி "அவர் படிசு எனக்குப் பொந்திகைப்படவில்லை." (I am not satisfied with his mood) என்று கூறியதாகவும்,