பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 யடுத்து நானும் துறைமாற்றப் பட்டேன். பொதுத்துறைக் கூடத்தைச் சேர்ந்த ஒரு சிறு நூல் நிலையம் உண்டு. அதிலுள்ளவை பெரும்பாலும் தமிழ் நூல்களே. எனக்குரிய வரலாற்று நூல், மொழி நூல், மாந்த நூல் (Anthropology) ஆகிய முத்துறைப்பற்றிய ஆங்கில நூல்கள் அதில் இல்லை அதனால், என் உறை யுளிலுள்ள என் சொந்த நூல் நிலையத்தை அங்கு மாற்றக் கருதி, பொதுத்துறைக் கூடத்தின் ஒரு கோடியில் இரு பாக அகலத்தில் எனக்கு இடம் ஒதுக்கித் தருமாறு பேரா. கோ. சுப்பிரமணியனாரைக் கேட்டேன். அவர் இசைந்தது போற் காட்டினும் ஒன்றும் செய்யவில்லை, அது அவர் குற்றமன்று. அன்று நான் தாங்கிய பதவி நிலையே அதற்குக்கரணியம். நான் அ. ம. பக. கழகத் தில் அமர்த்தப்பட்டது மொழி நூல் துறைக்கு, அதன் பின் கொண்டான்மார் சூழ்ச்சியால் புகுத்தப்பட்டது பொது ஆராய்ச்சித் துறை அதற்கும் மொழி நூல் துறைக் கும் யாதொரு தொடர்புமின்று. பேரா. கோ. சுப்பிரமணி யனாரும் மொழி நாலறிஞரல்லர். என்னைப் பற்றிப் பேராசி ரியரும் பெருமக்களும் பலர் பரிந்துரைத்திருந்ததினால், அரவயவர் முத்தையா அவர்கட்கும் என்னை உடனே விலக்க விருப்பமில்லை. பேராசிரியரும் தனித்துறைத் தலைவரும் தவிரப் பிறரெல்லாம் ஒரு பேராசிரியரின் கீழேயே இருத்தல் வேண்டுமென்பது பல்கலைக் கழக ஒழுங்கு, எனக்கொரு தனித்துறையின்மையால், எழுத்துப்போக்குவரத்து வாயிற்காகவேனும் ஒரு பேரா சிரியரின் கீழ் அமர்தல் வேண்டும். நான் சேரக்கூடிய துறை தமிழாராய்ச்சிப் பொதுத்துறை ஒன்றே. ஆதலால் அதிற் சேர்க்கப்பட்டேன். ஆயினும் என் நலைமை துணைக்கண்காணகரும் இணைக்கண் காண கருமே கவனிக்கத் தக்கவாறு தனிப்பட்டிருந்ததினால் பேரா. கோ. சுப்பிரமணியனார் நான் விரும்பியவாறு ஏந்து