பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(வசதி) செய்துதர இயலாது போயிற்று. மேலதிகாரிகள் ஏவினாலொழிய எனக்கென்று ஒரு தனி ஏற்பாடு செய்து தரும் அதிகாரம் அவரிடத்தில்லை. நான் பொதுத்துறை யிலிருந்தது, ஒர் அரசியல் தூதன் அயல்நாட்டிலிருந்தது போன்றே. நான் மொழிநால் துறையினின்று விலக்கப்பட்ட திற்குக் கொண்டான்மார் சூழ்ச சியே கரணியமாயி னும், என் தகுதியின்மையோ ஆராய்ச்சித் தவறோ கரணியமென்று அதிகாரிகட்கும் பிறதுறையினர்க்கும் மாணவர்க்கும் பொதுமக்கட்கும் தோன்று மாதலால், அத் தவற்றெண்ணத்தை நீக்குதற்கு, துணைக்கண்காண கரிடம் சென்று, தமிழ் நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர் மாநாடொன்று கூட்டவேண்டு மென்றும், அதில் என் எதிரிகளும் நானும் அவரவர் மொழிநூற்கொள்கையை எடுத்துக்கூற வேண்டுமென்றும், மாநாட்டின் பெரும் பான்மைத் தீர்ப்பை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், எனது கொள்கை தவறென்று தீர்க்கப்படின் உடனே வேலையை விட்டுவிடுகிறேன் என்றும் சொன்னேன். அதற்கு அவர்கள் " அதென்ன, வழியிற் போவாரையெல் லாம் கூப்பிட்டுக் கேட்கிறது? என்று விடையிறுத்து விட்டார்கள். அண்ணாமலைப் ப. க. கழகத்தில் வேலை பெறவேண் டினும் நிலைக்கவேண்டினும், முதலாவது இணைக்கண்கா ணகர் இசைவு வேண்டும்; இரண்டாவது, துணைக்கண் காணகர் கண்ணோட்டம் வேண்டும்; மூன்றாவது, இரு பேராசிரியரின் நல்லெண்ணம் வேண்டும்; நான்காவது, பிராமண ஆசிரியரின் வெறுப்பின்மை வேண்டும்; ஐந்தாவது, ஆளுங்கட்சியைத் தாக்காதிருத்தல் வேண்டும்; இவ்வைர் தனுள்ளும் முதலது ஒன்றிருந்