பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

53 ஆகவே, ஆரிய ஏமாற்றம் அடியோடொழிந்தா லொழிய, தமிழுக்கு இனி நற்காலமில்லை யென்பதைத் தெளிவாய் உணர்ந்தேன். என்பாற் பற்றுள்ள என் நண்பரோ, "ஏனையத் தமிழ்ப் பேராசிரியரெல்லாம் ஆரி. யத்தோடு ஒத்துப்போகும்பொழுது, நீங்கள் மட்டும் ஏன் தனியாக அதை எதிர்க்கிறீர்கள்? நீங்களும் ஒத்துய் போகிறது தானே! இன்னுஞ் சில்லாண்டு பதவியிலிருக் கலாமே! இந்தக் காலத்தில் வேறெங்கே ஐந்நூறுருபா கிடைக்கும்?" என்றெல்லாம் சொன்னார்கள். ஆயினும் உளம் ஒப்பவில்லை. என்ன தீங்கு நேரினும் உண்மையை எடுத்துச் சொல்வது ஆராய்ச்சியாளன் கடமையென்றும் மிகக் கொடுமையாய் வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழை அதனின்றும் மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோளென்றும், இதற்காகவே என்னை இறைவன் படைத்தானென்றும், அதனால் அது நிறைவேறியே தீருமென்றும் நான் கூறினேன். பொதுவாராய்ச்சித் துறையிற் சேர்ந்து சில மாத மான பின் 3 அடி நீளமும் 21 அடி அகலமுமுள்ள ஒரு புதுத் தேக்குமர நிலைமேடை எனக்கு வந்து சேர்ந்தது. ஆயினும், அடிக்கடி சொன்னிகழ்த்த நேரும் பன்னிருவர் அடுத்தடுத்துள்ள ஒரு கூடத்தில் ஆராய்ச்சி செய்வ தென்பது, சந்தை நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றிற்று. எனினும், பண்டாரகர் மண வாளராமானுசன் போன்ற தமிழன்பர் துணைக்கண்காண கராய் வரநேரின் தமிழ் நிலையும் என் நிலைமையும் சீர் திருந்தும் என்னும் எண்ணத்தினால் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தேன. ae நீக்கப்படலம் ஐந்தாண்டாயிற்று. நான் செய்துவந்த வேலை ஒரு வர்க்கும் வெளிப்படையாய்த் தெரிந்திலது. அதற்கு