பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 வாய்ப்பிருந்தும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேரா. லெ.பெ. கரு. இராமநாதரிடத்தும் துணைக்கண் காணகர் திரு. நாராயணசாமியாரிடத்தும் நான் செய்து வந்த வேலையை அடிக்கடி தெரிவித்து வந்தேன். அது போதுமென்று கருதினேன், பேரா. சேதுவினிடத்தும் என் வேலையை எழுத்து வடிவிற் காட்டச் சென்றேன். அவர் மறுநாள் வரச்சொல்லிவிட்டுக் குற்றாலத்திற்குக் கிண்ணிவிட்டார். ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் ஒரு நாளும் ஆராயாதிருக்க முடியாது. அவன் ஆராயாவிடினும் அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென்றும் நனவென்றும் ஊண் வேளையென்றும் உறக்க வேளை யென்றுமில்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சி யும் எனக்கு இயல்பாக இன்பர் தருங் கலைகள். அவ் வாராய்ச்சித் தொடர்பில், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியில் இல்லாத ஆயிரக்கணக்கான சொற்களை இருவகை வழக்கினின்றும் தொகுத்து வைத் தேன். ஆங்கில முறையில் தொகுத்ததினால், எளிய சொற்களும் அதில் இடம் பெற்றுள. அவற்றை நோக் காது அருஞ்சொற்களை நோக்கினால்தான், அத்தொகுப் பின் அருமை புலனாகும். -எ-டு : பொண்டான் = எலிவளையின் பக்கவளை - (உலகுவழக்கு) கவைமகன் -ஈருடலொட்டிய மகவிரட்டை (Twins) - இலக்கிய வழக்கு நான் அண்ணாமலைப் ப.க. கழகத்தில் அமர்த்தப் பெற்றதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் தொகுப்பிற்கே. அதற்கு அடிப்படையாய் வேண்டுவது இதுவரை அகரமுதலியில் இடம்பெறாத சொற்றொகுப்பே