பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 1961-ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23-ஆம் பக்கல் அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினேன். என்னோடு தமிழும் வெளியேறியது. அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் எனக்குப் பதவியூன்றாமையாலேயே இக்கட்டுரைத் தொடருக்கு 'என் அண்ணாமலை நகர் வாழ்க்கை ' என்று பெயரிட்டேன். அ நான் வெளியேறிய பின், எனக்குக் குறிக்கப்பட்ட பணியைச் செவ்வையாய்ச் செய்ய வில்லை யென்று என்மேற் குறை கூறுவதாகத் தெரிகின்றது ஒருவன் கையைக் கட்டிவிட்டு அவன் வேலை செய்யவில்லை யெனின், எங்ஙன் பொருந்தும்? மொழியியல் துறையின் முதற்பணியாக விளம்பரஞ் செய்யப்பெற்ற, சொற்பிறப் பியல் தமிழ் அகரமுதலியை இன்னும் ஓராண்டுக்குள் ளேனும் தொகுப்பார் அண்ணாமலைப் ப.க கழகத்தில் எவரேனும் உண்டோ ? அறை கூவி அழைக்கின்றேன். ஒரு வேண்டுகோள் நூலைப் பற்றியும், பதிப்பக முயற்சி பற்றியும், பதிப்பகத்தோடு உங்களை இணைத்துக் கொள்வது பற்றியும் உங்கள் கருத்து எதுவாயினும் இணைத்துள்ள அஞ்சலட்டையில் எழுதி அனுப்புங்கள்.

on