பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

25. மணவாளன் - பெங்களூர் 26. இராமலிங்கம் 27. இரா. சு. மதிவாணன் 28. திருவாட்டி மணிமொழி 29. பா. நல்ல பெருமாள், திருக்குறள் மன்றம் 30. பொற்செழியன் 31. பா. திருநாவுக்கரசு 32. சு. முகில் வண்ண ன் a 33. மு. சரவணன் 34. அ. குணசேகரன் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பாவாணர் கருத்து "பெரியார்க்குத் தமிழ் எழுத்தை மாற்றவேண்டுமென்பது கருத்தன்று. சிக்கனம் பற்றியே தம் சொந்த இதழில் அதை மாற்றிக் கொண்டார். 25 ஆண்டுகள் அவரோடு தொடர்பு கொண்டிருந்தேன். ஒரு முறை கூடப் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப் பற்றிச் சொன்னதில்லை. 1938 இல் அவர் ஈரோட்டிலிருந்து எனக்கெழுதிய ஏழுபக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது. 1947 இல் எனக்கும் புலவர் பொன்னம்பலத்திற்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இன்றுள்ள எழுத்துமாற்றக் கிளர்ச்சிக்கு அடிப்படை திரு. கொண்டல் சு. மகாதேவன் குறும்பே". [தி. பி. 2010 கன்னி 1 (17-0-79) ஆம் நாளைய மடற்பகுதி. பாவாணர் அவர்கள் திரு. கு பூங்கா அனத்திற்கு வரைந்தது)