பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 73


காய்கறி வகைகள், கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரை வகைகள் இவை தனித்தனியாகப் பிரித்து அடுக்கி வைத்திருப்பதே ஒரு தனி அழகு. கீரை வகைகள் வாடாமல் இருப்பதற்கு சில இடைவேளைக்கொருமுறை நீர் சொட்டிக் கொண்டிருக்க அமைத்திருக்கும் முறை அற்புதமாக அமைந்திருக்கும். நமக்கு வேண்டியவற்றைப் பொறுக்கி எடுப்பதற்காகவே வைக்கப் பெற்றிருக்கும். பிளாஸ்டிக் கூடை, அல்லது தள்ளுவண்டியில் எடுத்துவந்து பணம் செலுத்த வேண்டிய இடத்திற்கு வந்தால், அவை தனித்தனியாக எடை போடப் பெற்று, விலை குறிக்கப்பெற்று பில் போட்டுத் தந்து அதிலுள்ள தொகையைப் பெற்றுக் கொள்வார்கள். யாரும் பணத்தைப் பார்ப்பதில்லை. கிரெடிட் கார்டு (Credit Card) மூலமே அனைத்தும் நடைபெறும்.

ரெடிமேட் ஆடைகளுக்குத் தனிக்கடை பனியன், சட்டை, அண்டர்வேர், கோட் முதலிய அனைத்தும் தனித்தனியாக வகைப்படுத்தி வைக்கப் பெற்றிருக்கும். தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து பில் போடப் பெற்று தொகையைச் செலுத்திப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பல உண்ணும் கடைகள் உள்ளன. அங்கு சென்று தேவையானவற்றை உண்ணலாம்; சிலவற்றைப் பார்சல்களாகக் கட்டிப் பெறலாம். நம் நாட்டு உணவு வகைகள் தின்பண்ட வகைகள் வேண்டுமானால் இப்பகுதியிலுள்ள கடைகளுக்குத் தான் வரவேண்டும். சில உண்ணும் கடைகளில் முடிவெட்டும் அமைப்பும் உள்ளது. இப்பகுதியில் மட்டும் முடிவெட்ட எட்டு டாலர் என்று விளம்பரம் செய்துள்ளனர். பிற இடங்களில் பத்து டாலர் வாங்குகின்றனர்.

2. ஸ்டேபில்ஸ்[1] (ஏப்ரல்-20): காலை சிற்றுண்டிக்கு பிறகு முற்பகல் 10 மணிக்குப் புறப்பட்டுச் சென்று பகல் 12.15க்கு திரும்பிவிட்டோம். இந்த இடம் நார்த்தெர்ன் புல்வோர்டு[2] என்ற இடத்தில் உள்ளது. என் மகன் இல்லத்திலிருந்து சுமார் 3-4 கல் தொலைவு.

ஒரிடத்தில் அலுவலகத்திற்கு வேண்டிய பல்வேறு வகை மேசைகள், நாற்காலிகள் ஒருவித ஒழுங்கில் வைக்கப் பெற்றிருந்தன. இவை தனிமையாக ஒரு மூடு அறையில் வைக்கப் பெற்றிருந்தன. அவற்றை வாங்க விரும்புவோருக்கு அந்த அறை திறந்து காட்டப்பெறும் முறையில் அமைந்திருந்தன.

அடியிற் குறிப்பிட்டுள்ள பொருள்களனைத்தும் ஒரு பெரிய அறையில் அற்புதமான ஒழுங்கு வரிசையில் அமைக்கப்பெற்றிருந்தன. தேவையறிந்து


  1. Staples - அலுவலகத்திற்குரிய சாமான்கள் அனைத்தும் கிடைக்கும் இடம்
  2. Northern Boulevard - a prominent street or Dromenade