பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 என் அமெரிக்கப் பயணம்

வால்மார்ட்டில் மட்டும் நுழைந்து பார்த்தோம். சாமான்கள் அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும் முறைகளே எங்கள் கருத்தையும் கண்ணையும் கவர்ந்தன. அறை ஒரங்களில் திறந்த மர அடுக்குகளில் உள்ள சாமான்களின் விலை தனித்தனியாகக் குறிக்கப்பெற்றிருந்தது. இவ்விடங்களில், தயாரிக்கப் பெற்ற ஆடை வகைகள்'; தங்க நகைகள்; தங்க முலாம் பூசப் பெற்ற நகை வகைகள்'; குழந்தைகள் முதல் வளர்ந்தோர் வரை உள்ளவர்கட்கு காலணி வகைகள், காலடி துணி உறைகள்"; மிதியடி வகைகள்; பொம்மை வகைகள்; தாள் வகைகள்; கோப்பு வகைகள்'; புத்தகங்கள்; அகராதி வகைகள்; விளையாட்டுச் சாமான் வகைகள்’ துணி வகைகளில் படுக்கைவிரிப்புகள்; ஏனைய துணிவகைகள்; தோட்டத்திற்குத் தேவையான பொருள்கள்; விதை வகைகள்; செடிவகைகள், பேனா வகைகள்; எழுதுகோல் வகைகள்; மேசை, நாற்காலி வகைகள், ஊஞ்சல் வகைகள், பலவண்ணம் பிளாஸ்டிக் பூ போன்ற அலங்கார வகைகள், ஊசி, நூல் வகைகள்; பல்வேறு பாசி வகைகள்; வானொலி, தொலைபேசி கருவிகள்; ஒளிப்படக் கருவிகள்; படத் தொகுப்புப் பொட்டி வகைகள்; அடுப்பறைக்குத் தேவையான பொருள் வகைகள்; பல்வேறு பிசுகோத்து வகைகள்; மிளகு மிட்டாய் வகைகள்; சாக்லட்டு வகைகள்; பல்வேறு பழச்சாறு வகைகள்; பால், சர்க்கரை, கால்நடை தீவனங்கள் ; அவை வளர்ப்புக்குத் தேவையான சாமான்கள்; காலி மீன் தொட்டிகள்; பல்வேறு வண்ண மீன்கள் கொண்ட தொட்டிகள்.

அறை நடுவில் பல்வகைச் சாமான் குவியல்கள். இவற்றில் எதையெடுத்தாலும் ஒரே விலை. நாங்கள் இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்து ஒளிப்படத் தொகுப்பொட்டி, பிசுகோத்து வகைகளில் சில ஆகியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பினோம். போகும்போது தடவகைகளைக் குறித்துக்கொண்டு சென்றதால் எளிதாக அங்காடி இருக்கும் இடத்தை அடைய முடிந்தது. திரும்பும்போது இரண்டு இடங்களில் வழிமாறியது. காருக்கு பெட்ரோல் போடும் இடங்களின் உரிமையாளரை வினவி சரியான தடங்களில் திரும்பினோம்.

4. உலக வாணிக மையம்': (ஏப்ரல் 10, புதன் பிற்பகல் சுமார் 4.30 மணிக்கு) ஏழெட்டுக் கல் தொலைவிலுள்ள இந்த மையத்தைப் பார்க்கச் சென்றோம். நான் என் மனைவி, என் மகன், மருமகள் காரில் சென்றோம். காரை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு கடையைப் பார்க்க ஆயத்தமாகின்றோம். வெட்டவெளியில் கார்கள் நிறுத்தும் இடங்கள், மூடிய பகுதிக்குள் நிறுத்தும்

7. Rack 8. Readymades 9. Imitation gold 10. Socks 1 1. Files 12. Sports goods.

13. Albums 1. Mall - என்ற பெயரில் வழங்கும் வணிக மையம்..