பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 79

பார்வையாளர்களை ஈர்த்து வியத்தகு குலை நடுக்கமுள்ள காட்சிகளால் மயக்கமுறச் செய்வது. அண்மை மாநிலங்களிலுள்ளோரையும், அட்லாண்டிக் மாக்கடலுக்கப்பாற்பட்ட இடங்களிலுள்ளாரையும் உணர்வு பொங்கும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வல்லது. 86-வது மாடியிலுள்ள திறந்தவெளி உயரப் பார்வை அமைப்பு சாவகாசமாக நடந்து பார்க்கும் இந்த இடம் கண்ணாடியால் சுற்றிலும் மூடப் பெற்றுள்ளது. நியுயார்க்குக்கு வருவோர் தவறாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் இது. (படம் - 20)

ஒன்றிரண்டுமாடிக்கு மின்னேற்ற அமைப்பில் சென்றுகியுவரிசையில் நின்று நுழைவுச்சீட்டு பெறவேண்டும். பெரியவர்கட்கு 9 டாலர் முதுபெரும் மக்களுக்கு 7 டாலர்; சிறுவர்கட்கு 4 டாலர். நுழைவுச் சீட்டுகள் வாங்கியவுடன் 80 மாடிகளை நேராக சென்று இடம் மாறி மீண்டும் 6 மாடி கடந்து திறந்த வெளி உயர் பார்வை அமைப்பிற்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து மெதுவாக நகர்ந்த வண்ணம் நான்கு திசைகளிலும் நம்பார்வையைச் செலுத்துகின்றோம்.

மேற்குத்திசை இத்திசையில் நம் கண்வட்டத்தைச் செலுத்தும் போது மாடிசன் விளையாட்டு வளாகம்”, ஹட்சன் ஆற்றில் அமைந்துள்ள இரண்டாம் உலகப் பெரும் போரில் பங்கு கொண்ட இன்ட்ரெட் என்ற போர்க்கப்பல் ஆகியவற்றைக் காண்கின்றோம். நியுயார்க், நியுஜெர்சி துறைமுகம், மான்காட்டனையும், நியுஜெர்சியையும் விரைவில் இணைக்க வல்ல படகு வசதிகள்”, சுற்றுலாவிற்குரிய வாகன வசதிகள், நியுயார்க்கையும் நியுஜெர்சியையும் இணைக்கும் ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் ஆகியவற்றையும் பார்க்கின்றோம். (படம் - 21)

தெற்குத்திசை இத்திசையில் நம் பார்வை செல்லும் போது மிக உயர்ந்த வால் தெருவின் கட்டடங்களுக்கிடையே வரலாற்றுப் புகழ் பெற்ற கட்டடங்கள் யாவும் சிறுத்துக் காணப்பெறுகின்றன. தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக ஒடும் கார்கள் யாவும் சிறுவர்கள் விளையாடும் பொம்மைக் கார்கள் போல் தென்படுகின்றன. நம் பார்வை தொலை தூரப் பார்வையாக மாறும்போது இடிபாடுகளுடன் சிதைந்து கிடக்கும் இரட்டை உலக வாணிக மைய கோபுரங்கள் நம் கண்ணில் படுகின்றன. அடுத்து சற்று நடுவில்

4. Eectric lift 5. Senior Citizen

6. Madison Square Garden Sports entertainment complex, Qls, 5-60Luff; பந்தயக்காட்சி அரங்கம் உள்ளது. இங்கு உலகக் குத்துச் சண்டைப் போட்டிகள் நடைபெறும். இவை போன்றவற்றைப் பார்க்கும் அமைப்பில் தொகை செலுத்தினால் அந்த அமைப்பு நம்மை இட்டுச் சென்று காட்டும்.

7. Intrepid 8. Ferry Services

9. George Washington Bridge 10. Wall Street Structures