பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 0 என் அமெரிக்கப் பயணம்

பிளாட்டிரான் கட்டடமும்”, இதற்கு அடுத்து தெற்குப் புறமாக ஒரு காலத்தில் 60 மாடிகளைக் கொண்ட எடுப்பான மிக உயர்ந்த கட்டடம் என்று வழங்கிய வுட்வொர்த் கட்டடமும்’ நம் பார்வைக்கு எட்டுகின்றன. வடபுறமாகவுள்ள நியுயார்க் வளைகுடா"வில் உள்ள சுதந்திர தேவியின் சிலை”, அதன் அருகில் உள்ள எல்லிஸ்தீவு”, ஆகியவையும் கீழ் இடபுறமாக புரூக்லினையும் ஸ்டாட்டன் தீவையும் இணைக்கும் கம்பீரமான வளைவில் அமைந்த வெரஸானா நேரோஸ் பாலமும்” இதன் பின்னணியில் சிறியவையாகத் தென்படும். புரூக்லின் பாலம், மான்காட்டன் பாலம், வில்லியம் பாக் பாலம் ஆகியவையும் கண் வட்டத்தில் அமைகின்றன.

வடக்குத்திசை வடக்குத்திசையில் நம்பார்வை செல்லும்போது ஆடும் ஒளியுடன் காணப்பெறும் கிரைஸ்லர் கட்டடமும்” அதனையொட்டிக் கண்ணைக் கவரும் மெட்லைஃப் கட்டடமும்” பார்வையில்படுகின்றன. ஐந்தாவது அவின்யூ சாலையில் நம்பார்வை செல்லும்போது இராக்ஃபெல்லர் மையம்"ஜி.இ. கட்டடம்”, அதன் வலப்புறம் உலகப்புகழ், வாய்ந்த புனித பாட்ரிக் தேவாலயம், மத்திய பூங்கா ஆகியவை புலனாகின்றன. இடப்புறமாக நியுயார்க்கையும் நியுஜெர்சியையும் இணைக்கும் கம்பீரமான வாஷிங்டன் பாலத்தின் கீழே ஹட்சன் ஆறு ஒடுவது தெரிகின்றது.

கிழக்குத்திசை: நேர்கிழக்குத் திசையில் இருப்பது குயின்ஸ் பரோ என்பது. இதன் வடகிழக்கில் உள்ள ஐ.நா.வின் தலைமைச் செயலகக் கட்டடம் நம் கண்ணில்படுகின்றது. இதன் பொதுச் செயலகப் பகுதியின் கண்ணாடி உருக்கு இரும்பாலான அமைப்பு நம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. லாங் தீவை நோக்கி வளைந்து செல்லும் ஆற்றில் அமைந்துள்ள டிரைபரோ”, வொயிட்ஸ்டோன்’, திராக் நெக் பாலங்கள்’ லாக் கார்டியா விமான நிலையம்’ அனைத்து உலக நாடுகளின் கென்னடி விமான நிலையம்”, நூற்றுக் கணக்கான கல் நீண்டு கிடக்கும் லாங்க் தீவின் மணல் தரையாலான கடற்கரை’ ஆகியவை தென்படுகின்றன. தென்கிழக்குத் திசையில் வில்லியம்பர்க் பாலம்’ புரூக்லினைத் தொடுவதாக அமைந்துள்ளது. (படம் -22)

11. Flatiron Building 12. Woodworth Building 13. New York Bay 14. Statue of Liberty 15. Ellis Island

16. Verasana – Narrows Bridge 17. Chrisler Building - கார் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய ஒரு நிறுவனம்.

18, Metlife Building 19. Rockfiller Centre cornpark 20. G.E. Building 21. Central Park 22. Triboro 23 Whitestone 24. Throgs Neck 25. Lock Guardia Airport

26. JFK International Airport 27. Long Islands sandy beach 28. Williamburg Bridge