பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 89

காண்கின்றோம். இவற்றிலிருந்த பழைய இரும்புப் பகுதியைச் சென்னையிலிருக்கும் இரும்பு வாணிகர் ஒருவர் ஏலத்தில் எடுத்துக் கொண்டதையும் அறிகின்றோம்.

அடுத்து இருப்பூர்தியில் நிலையத்துக்கு வந்து வீடு திரும்புகின்றோம். இரவு சுமார் 8 மணிக்கு இல்லத்தை அடைகின்றோம்.

6. நயாகரா அருவிகள்’

இவை பஃப்பலோ நயாகரா அருவிகள் எனவும் வழங்கப் பெறுகின்றன. பஃப்பலோ என்பது இந்த அருவிகள் இருக்கும் நகரத்தின் பெயர். இந்த ஊருக்கு இப்பெயர் எப்படி ஏற்பட்டது என்பது இன்றளவும் விளங்காப்புதிராகவே உள்ளது. ஆனால், அவை இருக்கும் இடம் வேறு எந்தப் பெயராலும் வழங்கப் பெறவில்லை. கிண்டலாக நோக்கினால் இந்த பஃப்பலோ நகரில் என்றுமே எருமை” இருந்ததில்லை. ஃபிரெஞ்சு சொல்லாகிய beauflauve’ (அழகான ஆறு) என்ற பொருளைக் கொண்டது, தவறாக உச்சரிக்கப் பெற்று இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று என்பது ஒரு கொள்கை.

இரா.பெர்ட் வாசாலி என்ற ஃபிரெஞ்சு ஆய்வாளர் தமது சிறியபடகை, சிறிய படகை இயக்கும் உறுப்பால் குறைந்த ஆழமுடைய நீரில் 1628-இல் நடத்திச் சென்றார். ஒரு சிறிய ஃபிரெஞ்சுக் குடியேற்றம் 1758-இல் இங்கு ஏற்பட்டது. அடுத்த ஆண்டு இது பிரிட்டிஷாரால் எரியூட்டப் பெற்றது. ஆனால், குடியிருந்தார் உறுதியாக எதிர்த்தனர். ஜோசஃப் எல்லிகாட்” என்பார் ஹாலண்ட் காண்ட் கம்பெனியார்” இந்நிலத்தை வாங்கிவிட்டதாகத் தெரிவித்தார். எல்லிகாட்” என்பார் நியு ஆம்ஸ்டர்டாம்” என்ற பெயரில் அமைக்கத் திட்டம் தீட்டினார்; அதனை வாஷிங்டன்’ (டி.சி) போல் அமைத்தார்.

நகர் அவ்வாறு அமைக்கப்பெற்றது. ஆனால், குடியிருந்தோர் அதனை பஃப்பலோ என்ற பெயரால் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தினர். மீண்டும் பிரிட்டிஷார் இந்நகரை 1812-இல் நடைபெற்ற போரில் எரிக்கு இரையாக்கினர்; ஆனால், அது விரைவில் திரும்பக் கட்டப்பெற்றது. 1818-இல் நீரில் செல்லக்கூடிய நீராவிக் கப்பல் ஒன்று அமைக்கப் பெற்றது. இந்த இரண்டு பெரிய நிகழ்ச்சிகளில் முதலாவது இச்சிறிய ஊரை 16 ஆண்டுகளில் பெரிய நகரமாக மாற்றியது.

1. Niagara falls, New York (unsiflouth)

2. Buffello Niagara falls 3. Mystery 4. Buffelo 7. Robert La Salia 8. Paddle 9. Setlernent 10. Joseph Ellicot 1 1 . Holland Cand Co 12. Ellicott

13. New Amsterdam