பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 9 91

அயர்விலா ஆவல் தூண்டும்

ஆர்த்தெழும் வீழ்ச்சி’ காணுமே பயன்விரி வேகம் நெஞ்சில்

பாயலை உணர்ச்சி பாய்ச்சும் வியன்தலைத் தேக்கம் நீர்கொள்

விரிநிலை பெருகும் காட்சி’ என்பதற்கிணங்க நம் மனத்தில் உந்தல் எழுகிறது.

நயாகரா-இரவுக் காட்சி: அன்று இரவு டாக்டர் தனஞ்செயன் எங்கள் காரை ஒட்டிவர சரியாக இரவு 8.30-க்கு அருவியிருக்கும் இடத்தை அடைந்தோம். 5 டாலர் கட்டணம் செலுத்தி காரை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு பாலம்போல் கட்டியிருக்கும் உயரமான இடத்திற்குச் சென்றோம். நயாகரா ஆறு அமெரிக்காவையும் கனடாவையும் பிரித்து நிற்பதுபோல் அமைந்துள்ளது. எதிர்ப்புறமுள்ள கனடாவைச் சேர்ந்த அருவியின் உயரம் 176 அடி, குதிரையின் காலடி லாடம்” போல் சுமார் 2200 அடி அளவில் வளைந்து அமைந்துள்ளது. அமெரிக்கா பக்கமுள்ள அருவி சற்று உயரமாக (184 அடி), அமைந்து சுமார் 10.75 அடி வளைந்து அமைந்துள்ளது. ஏனைய இரண்டு அருவிகளிலும் மிகச் சிறிதானதான ‘முக்காடிட்ட பெண் போல் அமைந்துள்ள அருவி’ லூனா’ என்ற தீவினாலும் கோட்’ என்ற தீவினாலும் பிரிக்கப் பெற்றுள்ளது. (படம் - 29)

மூன்று அருவிகளிலும் ஒன்று சேர்ந்து வெளிவரும் நீரின் அளவு வினாடிக்கு 1.5 மில்லியன் (15 இலட்சம்) காலன்களாகும். ஆயினும் ஆற்று நீரில் பாதி முதல் முக்கால் பகுதி வரை. கடலில் கலப்பதற்கு முன்னர் மின்சார உற்பத்திக்காகப் பிரித்து விடப்பெறுகின்றது. இரவு நேரத்தில்தான் இவ்வாறு பிரித்து விடும் செயல் நடைபெறுகின்றது. உல்லாசப் பயணக் காலங்களில் ஆற்றின் பிரவாகம் வினாடிக்கு 700,000 காலன் வீதமும் ஏனைய காலங்களில் இதை விடக் குறைவாகவும் குறைக்கப் பெறுகின்றது.

இரவு நேரத்தில் நாட்டியமாடும் நங்கையின்மீது பன்னிற ஒளி செலுத்தப்பெறும்போது அவள் மிக அழகாகக் காணப்பெறுவதைக் கண்டு மகிழ்கின்றோம் அல்லவா? அங்ஙனமே தொலைவிலுலிருந்து சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிற ஒளிகள் செலுத்தப் பெற்றபோது அருவிகள்’

18. வீழ்ச்சி-Falls."அருவிகள் தாமே தமிழ் வழக்கு. 19. வா.மு.சே - அமெரிக்காவில் பெருங்கவிக்கோ. பக் 287. 20. Horse shoe 2 1. Bridal Neil 22. Luna sland 23. Goat Island

24. மலைகளை ஆணாகவும், ஆறுகளைப் பெண்ணாகவும் வருணிப்பது இலக்கியமரபு. இதனை

நினைத்துக் கொள்ள வேண்டியது.