பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ♦ என் அமெரிக்கப் பயணம்

சீர்தந்த கொடையோ? இல்லை
      தேவனின் கொடையோ? ஆற்றல்
கார்தந்த கொடையோ அன்பர்
      கவலைதீர் கொடையோ எந்த
வேர்தந்த கொடையீ தாமோ?
      விரிநிலம் அதிச யிக்க
யார்தந்த கொடையி தம்மா!
      நம்பிக்கை வெண்தி ரை!ஆ! (8)

இயற்கைத்தாய் கூத்துக் காட்ட
      இத்திரைச் சீலை தன்னை
அயராமல் விரித்துள் ளாளோ?
      யாரிதைச் சுருட்ட வல்லார்?
பெயல்மழை மலையில் வீழ்ந்து
      பெருகினும் இதனைப் போலப்
புயல்வேகம் வெல்லு மாமோ?
      புதுமையுள் புதுமை ஆ!ஆ! (9)

சித்திரக் கூட மோ?நல்
      தேவலோ கந்தான் ஈதோ?
முத்திரை ஓவி யத்தை
      முறை அறி சித்தன் வித்தை
இத்தரை வேந்தன் கால
      எண்ணத்தால் வடிக்கின் றானோ?
பத்தினிப் பெண்ணின் கற்போ?
      பரமனின் கரமோ? விந்தை (10)

இப்புது மைஅ ரங்கம்
      எழில்கூத்தோ அடடா! ஓ!ஓ!
ஒப்பிலாக் கூத்து! ஆசை
      ஊட்டிடும் கூத்து! இன்ப
முப்பழச் சுவைக்கூத் தை! வெல்
      முத்தமிழ்க் கூத்தீ தோ?ஆ!
எப்பக்கம் திரும்பி னாலும்

      ஏரார்ந்த கூத்தென் சொல்வேன் (11)