பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ♦ என் அமெரிக்கப் பயணம்

அமெரிக்கப் பகுதி வீழும்
      அருவியைக் கூடக் கண்கள்
இமைக்காமல் பார்ப்ப தற்கு
      இயலுமாம்! கனடா சேர்ந்த
குமைத்தெழு நயக ராவை
      கூர்விழி நோக்கு தற்கும்
அமைவிலா வகைபு கைசேர்
      அணிவீழ்ச்சி நிலையீ தென்னே! (22)

எங்கணும் வெண்பு கைகள்
      எங்கணும் மழைநீர்ச் சாரல்!
பொங்கியே சிதறுமா போல்
      பொலிமுகப் பார்வை யாளர்
அங்கங்கள் தெரிக்கும் ஈதை
      அவர்மழைக் கோட்டுத் தாங்கும்!
மங்கையர் ஆட வர்கள்
      மருளுவர் கண்ணால் பார்க்க! (23)

புதுப்புதுக் கோலம் காணப்
      பொன்விழி கோடி போதா!
புதுப்புதுத் தோற்றம்! அச்சம்
      புதுமையின் ஆச்ச ரீயம்!
புதுப்புதுக் கோலம்! காலம்
      புதுக்கிய பழமைத் தொங்கல்!
புதுப்புதுப் புனலின் வீச்சு
      புதுமையோ புதுமை எங்கும்! (24)

இயற்கையாய்ப் பரியின் பாயும்
      இலாடம்போல் அருவி தோன்றும்
வியத்தொறும் வியப்பே கீழ்வீழ்
      வேகமோ மாத்தி ரைக்கே
நயத்தெழு பத்து லட்சம்
      காலன்ஓட் டம்வி ளிம்பின்
செயல்நிலை ஆண்டு தோறும்

      திறல்குறை கின்ற தாம்!ஆ! (25)