பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 ♦ என் அமெரிக்கப் பயணம்

ஓடமோ லாடம் போன்ற
       உட்புறம் சென்று, நின்று
தேடரும் நீர்வீழ்ச் சிக்குள்
       சென்றிடும் மாந்தர் கண்கள்
ஊடுரு வித்தான் பார்த்தால்
       உவப்பலை அதிசயம் ஆ!
பாடரும் பாட்டின் விந்தை

       பாய்ச்சிடும் என்பர்! என்னே ! (30)

கிளம்பியது முதல் அருவிக்குள் நுழையும் வரை 20 மணித்துளிகள் ஆயின; சுற்றிக் கொண்டு திரும்புவதற்கு மீண்டும் 20 மணித்துளிகள். திரும்பியதும் படகை விட்டிறங்கி அருகிலுள்ள திரையரங்கை[1] அடைகின்றோம். ஒருவருக்கு 2 டாலர் வீதம் செலுத்தி நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு அரங்கிற்குள் நுழைந்தோம்; அமர்ந்து 20 மணித்துளிகள் படங்களைக் கண்டு களித்தோம். ஆதிமுதல் இன்று வரை அருவிகள் தோன்றி வளர்ந்த காட்சிகளை நேரில் கண்டு நுகர்ந்தோம்.

மின்விசை மூலம் அருவிகளைக் காணும் மேல் மட்டத்திற்கு வந்து சேர்ந்தோம். மீண்டும் காரில் ஏறி ‘கோட்ஐலாந்து’[2] (ஆட்டுத்தீவு) என்ற தீவிற்கு வந்தோம். தமிழகத்தில் குணசீலம் என்ற இடத்தில் (முக்கொம்பு) காவிரி, காவிரி-கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிந்து ‘திருஅரங்கம்’ என்ற பெரிய தீவினை உண்டாக்கிக் கொண்டு மீண்டும் கல்லணையில் ஒன்றுசேர்வதை அறிவோம். பலர் நேரிலும் சென்று கண்டிருப்பர். நானும் என் இளைய மகன் டாக்டர் இராமகிருஷ்ணனும் (அப்பொழுது 10 வயது சிறுவன்) காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் விடுதலை பெற்று திருப்பதியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம்.[3] நான் வைணவ திவ்விய தேசங்களைச் சேவித்துக் கொண்டு வந்தநிலை - கல்லணை வந்து அருகிலுள்ள திருப்பேர்நகர் (கோவிலடி) என்ற திவ்விய தேசத்தைச் சேவித்தோம். அதே காலத்தில் அழகப்பர் பயிற்சிக் கல்லூரி மாணாக்கர்கள் காவிரியின் தென் கரையிலுள்ள திருப்பராய்த் துறையில் - இராமகிருஷ்ணர் தபோவனத்தில் (தவத்திரு சித்பவானந்த அடிகள் நிறுவியது) குடிமைப் பயிற்சி முகாம் அமைந்திருந்த காலத்தில் (1954 என்பதாக நினைவு) - மாணாக்கர்களுடன் படகுகளின் மூலம் நேரில் காவிரியின் வடகரையில்


  1. Theatre
  2. Goat Island
  3. 1960 முதல் 1966 வரை நான் திருப்பதியில் பணியாற்றினாலும் குடும்பம் சிறுவர்களுடன் தமிழ்ப்லபடிப்பின் நிமித்தம் காரைக்குடியில் இருந்தது.