பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 105

உள்ள குணசீலத்தைப் பார்த்தோம். (காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரியும் இடம்)”

கோட் ஐலாந்து தோன்றி வளர்ந்த வரலாறு மிகவும் சுவையானது. நயாகரா ஆற்றின் வெள்ளம் ஆதியில் மிக அதிகமாக இருந்ததாகவும், அது வரவர குறைந்து கொண்டே வந்ததாகவும், குறைந்து கொண்டே வந்த ஒரு நிலையில் ஆற்றினிடையே இச்சிறு தீவு ஏற்பட்டு ஆறு இரு பிரிவாகப் பிரிந்து பிறகு ஒன்று சேர்ந்ததாகவும் ஒரு வரலாறு. அரசு இந்தத் தீவை ஒரு தனி நபருக்கு விற்றதாகவும், அவர் தலை முறைகளில் ஆடுமாடுகளை வளர்த்து அற்புதப் பண்ணைகளைக் கண்டதாகவும் மற்றொரு வரலாறு.இந்த நிலையில் ஏதோ ஒரு சமயம் ஒரு சூறாவளியும் பீடை நோய்களும் தோன்றி ஒர் ஆடும் ஒரு மனிதனும் தவிர அனைத்தும் அழிந்து பட்டதாகவும் பிறிதொரு வரலாறு. இந்நிலையில் அத்தனி நபர் ஆட்டையும், தீவையும் அரசிடம் ஒப்படைத்ததாகவும், அரசு அத்தீவிற்கு கோட்ஐலாந்து’ (ஆட்டுத்தீவு என்று பெயரிட்டதாகவும் இன்னொரு வரலாறு.

இத்தீவைக் காரிலே சுற்றிக் கொண்டு வந்து ஒரிடத்தில் காரை நிறுத்திவிட்டு கையுடன் கொண்டு வந்திருந்த எலுமிச்சைப் பழச்சாதத்தை உண்டு பசியாறினோம் (இப்போது பகல் 1 மணி). அடுத்து கனடா பக்கமுள்ள நயாகரா அருவியை அருகில் சென்று பார்க்கின்றோம். அடுத்து இத்தீவை விட்டுவேறு சிலவற்றைப் பார்க்கச் செல்லுகின்றோம்.

(1) சுழலும் குட்டை’’; சுமார் ஒரு கல் தெலைவில் கனடாப் பகுதியிலுள்ள இக்குட்டையைப் பார்க்க அமெரிக்கப் பகுதியிலுள்ள சாலை வழியே செல்லுகின்றோம். வெள்ளம் பெருகியிருக்கும் பகல் காலத்தில் ஒரு பகுதி நீர் பிரிந்து இக்குட்டைக்கு வந்து இடப்பக்கமாகச் சுழன்று கொண்டு வெளிச் சென்று ஆற்றுடன் கலந்து விடுகிறது. இரவு நேரங்களில் ஆற்று நீர் மின் உற்பத்திக்காக எடுத்துச் செல்லப்படும் பொழுது ஆற்றில் வெள்ளம் குறைந்து இக்குட்டைக்கு வந்து இடப்பக்கமாகச் சுழன்று கொண்டு வெளிச்சென்று ஆற்றுடன் கலந்து விடுகிறது. இரவு நேரங்களில் ஆற்றுநீர் மின்உற்பத்திக்காக எடுத்துச் செல்லப்படும் பொழுது ஆற்றில் வெள்ளம் குறைந்து இக்குட்டைக்கு வரும்நீரின் அளவு குறைகின்றது. இப்பொழுது நீர் வலப்பக்கமாகச் சுழன்று ஆற்றில் கலக்கின்றது. இஃது ஒர் அற்புதமான நிகழ்ச்சியாகும்.

31. திருவரங்கம் உள்ள தீவு மிகப் பெரியது - கோட்ஐலாந்து மிகச் சிறியது - எளிதில் நடந்தே

கற்றிப் பார்க்கும் நிலையிலுள்ளது.

32. Goat Island 33. Whirlpool 34. Clockwise

35. Anti-clockwise