பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 0 என் அமெரிக்கப் பயணம்

பிரிட்டிஷார் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். கனடாவிலுள்ள ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பப் போகும்வரை (1796 வரை) இக்கோட்டை அவர்கள் வசம் இருந்தது.

1812-இல் நடைபெற்ற போர்தான் நயாகரா அருவிகளை மிக அதிகமாக நாசமாக்கியது. ஆற்றிற்கு இரு பகுதிகளிலும் சிறிய அளவு குடியேற்றங்களில்” பெருபான்மை கொள்ளையடிக்கப் பெற்றுஎரியூட்டப் பெற்றன. 1814 சூலை 25-இல் மிகக் கொடுமையான லூண்டே-லேன் என்ற கடும்போரையும் இந்த அருவிகள் சந்தித்தன. இந்தக் கடுமையான போரில் இருசாராரும் வெற்றியை உரிமை கொள்ள முடியவில்லை. ஐந்து மாதங்களுக்குப் பிறகு கெண்ட் ஒப்பந்தத்தால்’ 2.5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது; எல்லைக்கோடுகள் திரும்பவும் உறுதி செய்யப் பெற்றன.

போருக்குப் பின்னர் நயாகரா அருவிகள் அமைதியையும் ஆக்க முன்னேற்றத்தையும் கொண்ட புதிய யுகத்தைக் கண்டன. குடியேற்றங்கள் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் நடைபெற்றன. 1812-இல் நயாகரா அருவிகள் இருந்த இடம் ஒரு நகரமாக உருவாயிற்று. 1820-இல் நீராவிக் கப்பல்களின் வருகையாலும், 1825-இல் ஈரிவாய்க்கால்” உருவாக்கப் பெற்றதாலும், 1840-இல் இருப்பூர்திப் பாதை உண்டாக்கப் பெற்றதாலும் இந்த மாநகர் உல்லாசப் பயணிகட்கு எளிதில் எட்டும்படியாக அமைந்துவிட்டது. “தேனிலவுக்காக இங்கு வருவோரின் காதல் இந்த அருவிகள் வாழும் நாட்கள் வரை நீண்டு வாழும்” என்ற பழமொழியும் தோன்றியது.

1800-இலும் 1900-த்தின் தொடக்கத்திலும் எச்சரிக்கையற்றவர்களை இந்த அருவிகள் புதிய காதல் முறையில் ஈடுபடுமாறு ஈர்த்தன. இதில் முதலாவதாக ஈடுபட்டவர் சாம் பாட்ச்” என்பார். இவர் இருமுறை அருவிகளில் கீழ்மூழ்கி உயிர்தப்பினார். உருண்டை வடிவமான மரத்தாலான அமைப்பினுள் புகுந்து கொண்டு அருவிகளின்மீது முதன்முதலாக 1901-இல் சென்றவர் அன்னி டெய்லர்’ என்பார். வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு* என்பார் 1961-இல் துணிவாக அருவிகளில் குதித்துப் பாய்ந்தார். அவர் மேலெழுந்ததும், ஆற்றிலும் அருவிகளிலும் துணிவாக இறங்குவது குற்றம் என்று விதிக்கப்பெற்றதால் சட்டப்படி கைதியாக்கப் பெற்றார்.

இன்று அருவிகள் உல்லாசப் பயணிகளின் ஈர்ப்பு மையங்களாக ஆக்கப் பெற்றுள்ளமையால் எண்ணற்றவர்கள் வந்து போகும் இடங்களாகத் திகழ்கின்றன.

48. Small Settlements 49. Treaty of Ghent 50. Erie Canal 51. Sam Patch 52. Annie Taylor 53. William Fitzgerald