பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 111

ஆற்றேன் வந்தடைந்தேன்;
       அடியேனை ஆட்கொண்டருளே

- பெரி. திரு. 1.9:4,8

என்ற பாசுரங்களை மிடற்றொலியால் சேவித்து அப்பெருமானையும் வணங்குகின்றோம்.

அடுத்து தும்பிக்கையான் சந்திக்கு வருகின்றோம். வள்ளல் பெருமான் தம் நெஞ்சில் எழுந்தருள்கின்றார்.

உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும்
      உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக்
      கழல் இணை நினைந்து நின் கருணை
வெள்ளம் உண்டு இரவு பகல்அறி யாத
      வீட்டினுள் இருந்துநின் னோடும்
விள்ளல் இல் லாமல் கலப்பனோ சித்தி
      விநாயக விக்கினேச் சுரனே

நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே
      நான்என அறிந்து நான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப்
      பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர்
      இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி
      விநாயக விக்கினேச் சுரனே

- திருவருட்பா மூன்றாம் திருமுறை
- சித்தி விநாயகர் பதிகம் 4,5

என்றப் பாடல்களை ஓதி உளங்கரைந்து வள்ளலார் அடைந்த நிலையை அடைய முயல்கின்றோம்.

அடுத்து சீதேவி (திருமகள்) சந்நிதிக்கு வருகின்றோம்.

மலரின் மேவு திருவே! - உன்மேல்
      மையல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும் - காண்பார்

      நினைவழிக்கும் விழியும்