பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 113

பின்னோர் இரவினிலே-கரும்
      பெண்மை யழகொன்று வந்தது கண் முன்பு;
கன்னி வடிவ மென்றே-களி
      கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவியடா!-இவள்
      இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவும் உலகில் வசப்பட்டு போமடா!

- பா.க. தோ.பா. மூன்றுகாதல்
(மூன்றாவது)

என்ற பாடலால் வாழ்த்தி வணங்குகின்றோம்.

இதனை நிறைவு செய்து கொண்டு இராமர் சந்நிதிக்கு வருகின்றோம். குலசேகரப் பெருமாளின் இராமர் சரிதம் நினைவிற்கு வருகின்றது.

அங்கண்நெடு மதிபுடைசூழ் அயோத்தி என்னும்
      அணிநகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர்விளக்காய்த் தோன்றி
      விண்முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னைச்
செங்கண்நெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
      தில்லைநகர் திருச்சித்திர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
      என்றுகொலோ கண்குளிர காணு நாளே

-பெரு. திரு. 10:1

என்ற பாசுரத்தை மிடற்றொலியால் சேவித்து சக்கரவர்த்தித் திருமகனை வழிபடுகின்றோம்.

அடுத்து இராதாகிருட்டிணன் சந்நிதிக்கு வருகின் றோம். திருக்கண்ணமங்கை திவ்வியதேசம்பற்றிய பாசுரம் ஒன்று நினைவில் எழுகின்றது.

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
      வாசலார் குழலாள் மலைமங்கைதன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான் தன்னைப்
      பான்மை யைபணி மாமதி யம்தவழ்
மங்கு லைசுட ரைவட மாலை

      உச்சி யைநச்சி நாம்வணங் கப்படும்