பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியுஜெர்ஸி மாநிலத்தில் உள்ளவை 115

தொடர்ந்து சத்திய நாராயணன், ஐயப்பன் ஆகியோரின் சந்நிதிக்கு ஏகி அவர்களை வழிபட்டு ஒன்பது கோள்கள் சந்நிதிக்கு வருகின்றோம். சம்பந்தப் பெருமானின் கோளறுதிகத்தின் (2.85)

என்பொடு கொம்பொ டாமை இவைமாார்

பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடிவந் தெமது

உளமே புகுந்த அதனால் ஒன்பதோ டொன்றோ டேழு பதினெட்டொறாறு

முடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல

அடியா ரவர்க்கு மிகவே (2)

என்ற இரண்டாவது பாடலை மட்டும் ஒதி கோள்களை வழிபட்டுத் திரும்பும்போது ஒரிடத்தில் இலட்சுமி-பார்வதி-சரசுவதி’ என்ற மூன்று தேவிமார்களின் ஒன்றுபட்ட காட்சி நம்மை வியக்கவைக்கின்றது. மும்மூர்த்திகளின் தேவிமார்களுக்கு தமிழகத்தில் தனிசந்நிதி இல்லை. மூம்மூர்த்திகள் என்ற சொல்வழக்கு தமிழகத்தில் உள்ளது. ‘மும்மூர்த்திகளின் தேவிமார்கள்’ என்ற வழக்கு அங்கில்லை. இதனை அமெரிக்கவாழ் தமிழ் மக்கள் ஏற்படுத்திச் சிறப்பித்தமைக்கு தமிழ் மக்கள் நன்றியுடன் போற்றக் கடமைப்பட்டுள்ளனர். இத்துடன் இத்திருக்கோயில் பயணம் நிறைவு பெறுகின்றது.

2. அட்லாண்டிக் மாநகர்’ சூதாடுகளன்

ஏப்ரல் 26 அன்று காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பகலுணவுக்காக புளியோதரை, தயிர்ச்சாதம் பொட்டலங்களுடன் முற்பகல் 11.30 மணிக்குப் புறப்பட்டோம். இது நியுஜெர்சி மாநிலத்தில் (அண்டை மாநிலம்) 120 கல் தொலைவில் உள்ளது. அட்லாண்டிக் மாக்கடல் கரையில் உள்ளது. நியுயார்க்கில் 15 மைல் தொலைவும், நியு ஜெர்சியில் 105 கல் தொலைவும் கடந்து செல்ல வேண்டும். 15 கல் தொலைவு நகருக்குள் செல்ல வேண்டியிருப்பதால் கார் வேகமாகச் செல்ல முடிவதில்லை; இதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று. அதற்கு மேலுள்ள பகுதியில் கார் மணிக்கு 65 கல் வீதம் செல்லலாம்; பிற்பகல் 3 மணிக்கு அந்த இடத்தை அடைந்துவிட்டோம். போகும் போது நியுயார்க்கையும் நியுஜெர்ஸியையும் இணைக்கும் சுரங்கப்பாதை வழியாகச் (சுமார் 2 கல் தொலைவு சென்றோம். (படம் - 34)

1. Atlantic City இது ஒரு சூதாட்டக்களன். இதனை விடப் பெரிய மற்றொரு சூதாட்ட

ஆடுகளன் லாஸ் வேகாஸ் (Laswagas) என்ற இடத்தில் நெவேடா (Neveda) மாநிலத்தில் உள்ளது.