பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 0 என் அமெரிக்கப் பயணம்

25 கல் தொலைவு வழியில் உணவு கொள்ளவும் காருக்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் இடங்கள் உள்ளன. பணம் கொடுத்து உண்ணலாம்; ஒப்பனை அறைகளும் உள்ளன. பிற்பகல் 2.00 மணிக்கு இத்தகைய ஒரிடத்தில் தங்கி உணவுகளை கொண்டோம். சாலை வசதிகளைப் பராமரிப்பதற்குக் கட்டணம் வாங்கினர். ஒருகல் தொலைவுக்கு 8 செண்ட் வீதம் கணக்கிடுகின்றனர். நான்கு ஐந்து இடங்களில் ஐந்துடாலர் வீதம் கட்டணம் செலுத்த நேர்ந்தது. அந்த இடங்களுக்கு நடுவேகார் செல்லும்போது காரிலுள்ள மின் அமைப்பு (E.2 Pass) ஒன்றில் கட்டணம் தண்டப்பெற்றதாகக் குறியிட்டுவிடும்’

கார் நிறுத்துமிடத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 2 டாலர். அதைச் செலுத்திக் காரை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு பல இடங்களைத் தவிர்த்துக் கொண்டு தாஜ்மகால் என்ற பெயரில் அமைந்துள்ள சூதாடுகளத்திற்குச் சென்றோம். இந்த இடங்கள் முழுவதும் சூதாடுகளங்கள் நிறைந்தவை. ஆறுகல் தொலைவுள்ள இந்த ஆடுகலன்கள் அமைப்பு 1870 லிலேயே ஏற்படுத்தப் பெற்றது. இரவு பகல் எல்லாம் எல்லா நாட்களிலும் ஆயிரக் கணக்கான ஆடுகளன்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் soly. U வண்ணம் இருப்பதைக் காண்கின்றோம். குருட்சேத்திரப் போர்க்களம் என்று ஒன்று புராணக்காலத்தில் இருந்தது போல் அட்லாண்டிக் பெருநகர் முழுவதும் ஆடுகளன்கள் நிறைந்தனவாகவே உள்ளது. இதனை ‘அட்லாண்டிக் பெருநகர் என்று சொல்லுவதைவிட மிகப்பெரிய அட்லாண்டிக் பெருநகர்’ என்று வழங்குவது மிகவும் பொருந்தும் (படம்-35)

வில்லிபாரதத்திலும், பாரதியின் பாஞ்சாலிசபதத்திலும் சூதாடு களத்தைப்பற்றிப் படித்துள்ளோம். அங்கெல்லாம் இருவர் ஆடுவதைப் பற்றிப் பார்க்கின்றோம். சூதாடுவதில் நிபுணனாகச் சகுனியைக் காண்கின்றோம். இங்கு அப்படி இல்லை. ஆனால், பொறி அமைப்புகளை ஆட்களாகக் கருதினால் அவை யாவும் பல்வேறு சகுனி நிலைகளை அடைகின்றன !

இங்குப் பல்வேறுவகை ஆடுகளன்கள் உள்ளன; நாணயங்கள் போட்டு ஆடப்பெறுவன, விளையாட்டுச் சீட்டுகள்’ வைத்து ஆடப்பெறுவன போன்றவை.நாணயங்கள் போட்டு ஆடப்பெறும் களம் ஒன்றை நோக்குவோம். 25 சென்ட், 50 சென்ட், ஒரு டாலர், ஐந்து டாலர் போட்டு விளையாடும்

2. Toijets

3. இஃது ஒரு கம்பெனிக்குச் சொந்தமானது. கம்பெனி நமது Credit Cardக்கு அனுப்பும். Credit Cardலிருந்து நமக்கு Bill வரும். அதற்கு நாம் காசோலை அனுப்ப வேண்டும். E-Z Pass என்பது ஒரு கம்பெனியின் பெயர்.

4. Casino 5. Playing Cards