பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 121

கெளவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்

கமழ்சந்தும் உந்தி நிவாவ லங்கொள் செய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத்

திருச்சித்ர கூடம் சென்று சேர்மின்களே

- பெரி-திரு. 3.2:7 என்பது அப்பாசுரம். இதனைச் சேவித்து இதன் மூலம் விட்டலையும் வணங்குகின்றோம்.

இந்த நிலையில் மகாலட்சுமி சந்நிதிக்கு வருகின்றோம். பாரதியார் ‘மூன்று காதல் பாடல்களில் இரண்டாவது இலட்சுமி காதல் பாாடல் நினைவில் எழுகின்றது.

இந்த நிலையினிலே-அங்கோர்

இன்பப் பொழிலி னிடையில வேறொரு சுந்தரி வந்து நின்றாள்-அவள்

சோதி முகத்தின் அழகினைக் கண்டென்ற சிந்தை திரைகொடுத்தேன்-அவள்

செந்திரு என்று பெயர்சொல்லினாள்; மற்றும் அந்தத் தினமுதலா-நெஞ்சம்

ஆரத் தழுவிட வேண்டுகின்றேன், அம்மா! (5) என்ற பாடலைப் பாடி அப்பெருமாட்டியை-புருஷகாத பூதை எனப்படும் பெரிய பிராட்டியாரை வணங்குகின்றோம்.

அடுத்து என் இதய கமலத்தில் நிரந்தரக் குடியிருப்பைப் பெற்றிருக்கும் பாலாஜி சந்நிதிக்கு வருகின்றோம்.

நோற்றேன் பல்பிறவி

நுன்னைக் காண்பதோர் ஆசையினால் ஏற்றேன் இப்பிறப்பே

இடருற்றனன் எம்பெருமான்! கோற்றேன் பாய்ந்தொழுகும்

குளிர்சோலைசூழ் வேங்கடவா! ஆற்றேன் வந்தடைந்தேன்;

அடியேனையாட் கொண்டருளே

- பெரி. திரு. 1.9:8

என்று மங்கை மன்னனின் பாசுரத்தால் சேவிக்கின்றோம்.

1 திருவண் பரிசாரம்- மலை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று நாகர்கோயிலுக்கு அருகில் உள்ளது.

இவ்வூர் நம்மாழ்வாரின் தாயைப் பெற்றப் பாட்டியார் ஊர். 2. மா.க.தோ.பா. மூன்று காதல்.