பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆ 127



காணமுடியுமா ? நீங்கள் நன்றாக நேர்மையுடன் பொருளிட்டி நல்வாழ்க்கையை அனுபவியுங்கள். நேர்மையில் வழுவாது வாழுங்கள். தமிழகத்திற்கு நற்பெயர் ஈட்டுங்கள்” என்று சொல்லி முடித்தேன். பின்னர் மகிழ்ச்சியுடன் பிரிந்தோம் - இரவு 8.30 மணிக்கு இல்லம் வந்தடைந்தோம்.

3. அருங்காட்சியகம்


இவற்றிலும் ஒன்றே ஒன்றை மட்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

1. டாலஸ் அருங்காட்சியகம் (இயற்கை வரலாறு):[1] இந்த அமைப்பைப் பார்க்க (மே மாதம் 20-ஆம் நாள் பிற்பகல் இரண்டரை மணிக்குப் புறப்பட்டோம். சுமார் 15 கல் தொலைவிலுள்ள இதனைப் பார்க்க நான், என் மனைவி, என் பேத்தி அனுபமா, அரவிந்தனும் காரில் சென்றோம். காரை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு நுழைவாயில் வழியாக உள்ளே சென்று உரிய கட்டணம் செலுத்தினோம்.[2] இந்த அமைப்பு மூன்று தளங்களில் ஏற்படுத்தப் பெற்றுள்ளது. தரைதளம், தரைக்குக் கீழ் தளம், தரைக்கு மேலுள்ள முதல் மாடி. காட்சிப் பொருட்கள் மிக அற்புதமாக அமைக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் விவரமான குறிப்புகள், விளக்கங்கள் தரப் பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்த முறைகள் ஈண்டு தரப் பெற்றுள்ளன.

1. தரை தளம்: இங்கு (1) டெக்ஸாஸ் பறவைகள் அடங்கிய மண்டபம், (2) பாலூட்டும் பிராணிகள் அடங்கிய மண்டபம்,[3] (3) நீர்ப் பகுதிகள் அடங்கிய மண்டபம், (4) காட்டெருமைகள் அடங்கிய மண்டபம் ஆகியவை இருந்தன.

பறவைகள் அடங்கிய மண்டபத்திற்கு வருகின்றோம். இங்கு அனைத்தையும் பார்த்து அனுபவித்து மகிழ்ந்தபோதிலும் முக்கியமான சிலவற்றை மட்டும் ஈண்டு காட்டுவேன்.

வாத்து, கொக்கு இவற்றில் பல வகைகள் உயிருள்ளவை போல் அவை வாழும் சூழ்நிலைகளுடன் காட்டப் பெற்றுள்ளன. இங்கு கரண்டி போன்ற மூக்கு அமைப்புள்ள வாத்துகள் எங்கள் கவனத்தை ஈர்த்து மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்தின.

அடுத்துப் பார்த்தவை மரங்கொத்திப் பறவைகள்":[4] இவை மரத்தைக் கொத்தும் பாவனையில் அவை வாழும் இயற்கைச் சூழ்நிலைகளுடன் அற்புதமாகக் காட்டப் பெற்றுள்ளன. அடுத்துப் பார்த்தவை பெலிக்கன்[5]” என்ற



(


  1. 1. Dallus Museum of Natural History. @g Fair Park storp &l ##l, Jonusfiglirstl.(Post Box 150349, Darrus, Rx 75315 - 6tsrug (p55uf)
  2. 2. பெரியவர்கட்கு 6.50 டாலர் முதியோர்களுக்கு 5.50 டாலர்.
  3. 3. (1) Hall of Texas Birds; (2) Hall of Texas Mammals; (3) Hall of Texas Wetlands;4) Bison Halt
  4. 4. Woodpecker
  5. 5. Pelican