பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 0 என் அமெரிக்கப் பயணம்

(1) புராங்கார்ன்’ - ஒரு வகை மான். முன் பக்கமாக நீண்டு வளைந்த கொம்புகளையுடையது. கொம்புகளின் முன்புறமாக இரண்டு வளைந்த சிறு கிளைக் கொம்புகள் கொண்டது. இஃது ஐந்தடி நீளம் உடையது. (2) மலைவாழ் சிங்கம் சற்றுச் சிறிய உருவங் கொண்டது; பிடரிமயிரில்லாதது. இரண்டு மூன்று உருப்படிகளைப் பார்த்தோம். (3) ஜாகுவார்’ - இஃது ஒரு வகை சிறுத்தைப் புலி. புள்ளிகளையுடையது 6% அடி நீளமுடையது. இது நீருள்ள பகுதிகளை விரும்புவது. தனிமையாகத் திரிவது. (4) காட்டெருமை’ பெரிய உருவத்தைக் கொண்டது. இதன் நீளம் 11 அடி. பெரிய உருவமுடையதாயினும் மணிக்கு 35 மைல் ஒடக் கூடியது. (5) கரடி வகை” - கரடியில் ஒரு வகை. பெரிய உருவங் கொண்டது. பொதுவாக மரக்கறி உணவை உண்பது; சில சமயம் இறைச்சி வகைகளையும் உண்பதுண்டு. 9 அடி நீளமுடையது; 1000 கிலோ எடை கொண்டது. (6) கபில நிற நரி’ -நாலைந்து உருப்படிகளை ஒரிடத்தில் பார்த்தோம். இஃது இரண்டிரண்டாகவே (இணையாகவே) காணப் பெறும். ஒன்றன் நீளம் 32 அங்குலம் எடை 7 கிலோ. அடுத்து தரைக்குக் கீழுள்ள தளத்திற்கு வருகின்றோம் - மின்விசை ஏற்றம் மூலமாக, இங்கு பழம் பொருள் ஆய்வகம்’ உள்ளது. இது தவிர பாலுண்ணும் உயிர்களாகிய எலி ஒன்று தனிப் பெட்டியறையிலும், தவளையொன்று’ தனிப் பெட்டியறையிலும் இருந்தமையைக் கண்டோம். இங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஒப்பனையறைகளும்’ இருக்கின்றன. காட்சியக அலுவலகமும் இங்கு இருப்பதையும் பார்த்தோம்.

இவற்றையெல்லாம் பார்த்து விட்டு மன நிறைவுடைய மகிழ்ச்சியுடன் திரும்புகின்றோம். பின்புற வாயில் வழியாக வெளியில் உருக்கு இரும்பாலான மூன்று பெரிய உருவங்களைக் காண்கின்றோம். இவை காரில் முன்புறமுள்ள உந்து பொறி வண்டியின் முட்டுத் தாங்கிகளால் ஆக்கப் பெற்றவை. செய்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயினவாம். பெரியவை ஒவ்வொன்றும் 32 அடிகள் நீளமுடையவை; சிறியது 20 அடி நீளம் கொண்டது. மூன்றும் சேர்ந்த எடை 7 டன்கள் ஆகும்.

காரில் ஏறி மாலை ஐந்து மணிக்கு இல்லம் அடைந்தோம்.

4. உயிர்க்காட்சி சாலை

இவற்றிலும் ஒன்று தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது - தங்கின நாட்கள் குறைவானமையால்

25. Pronghorn 26. Jaguvar 2 7 , Bison 28. Grizzly Bear 29. Grey Fox 30, Basement

31. Fossil Laboratory 32. Amphibians - நீரிலும் நிலத்திலும் வாழ்வது 33. Toilets 34. Bumpers