பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 0 131

டாலஸ் உயிர்க்காட்சி சாலை': மே மாதம் 18-ஆம் நாள் (சனிக்கிழமை) முற்பகல் 10-30 மணிக்கு இக் காட்சி சாலையைப் பார்ப்பதற்காக நான், என் துணைவி, பேத்திமார் இருவர், அரவிந்தன் ஆகியோர் புறப்பட்டோம். காட்சி சாலையிருக்கும் இடத்தையடைந்தோம். 4 டாலர் தந்து கார் ஒர் இடத்தில் நிறுத்தப் பெற்றது. வயது வந்தோருக்கு 7 டாலர் முதியோருக்கு 4 டாலர் சக்கர நாற்காலிக்கு 10 டாலர் வீதம் 2 நாற்காலிகள் (என் பேத்தி, அரவிந்தன் இயக்குபவை) வாங்கிக்கொண்டு காட்சி சாலைக்குள் நுழைந்தோம். அங்குப் பார்த்து மகிழ்ச்சியுடன் நுகர்ந்தவற்றை ஈண்டு தருகின்றேன். (படம் - 39)

இந்தக் காட்சி சாலை (1) காட்டு மிருகங்கள் அடங்கிய ஆஃபிரிக்கப் பகுதி, (2) காட்சி சாலை - வடக்குப் பகுதி, குழந்தைகள் - சாலைப் பகுதி’ என்று மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. என் பேத்தியும், அரவிந்தனும் நாங்கள் அமர்ந்த நிலையில் சக்கர நாற்காலிகளைத் தள்ளிக் கொண்டு வர நாங்கள் (1) உணவாகப் பயன்படும் பிராணிகள் அடங்கிய பகுதிக்கு வருகின்றோம். ஆந்தைகள், கழுகுகள், பருந்து போன்ற பறவைகள் அவை வாழும் இயற்கைச் சூழ்நிலைகளிலே வைக்கப் பெற்றிருப்பதைக் கண்டோம்; வியப்புற்று மகிழ்ந்தோம்.

(2) பூனை இனப் பகுதி: இங்கு உறங்கிய நிலையில் பிடரியையுடைய ஆண் சிங்கம், அருகில் பெண் சிங்கம் அவை வாழும் பெரிய இடப் பரப்பையுடைய சூழ்நிலைகளில் வைக்கப் பெற்றிருப்பதைக் கண்டு வியப்புடன் மகிழ்ச்சியடைந்தோம்.

(3) ஒட்டைச் சிவிங்கிகள்": இப்பகுதியிலும் அவை வாழும் இயற்கைச் சூழ்நிலையிலேயே இரண்டு பிராணிகள் வைக்கப் பெற்றிருந்தன. இவை அங்கும் இங்கும் பார்த்த நிலையில் இருந்தன. (படம் - 40)

(4) யானைகள்: இப்பகுதியுள் ஒரே ஒரு பெரிய யானை தான் இருந்தது. அது பெரியதொரு காட்டுச் சூழ்நிலையில் வைக்கப் பெற்றிருந்ததைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

(5) புலிகள்: இங்கும் பெரிய காட்டுச் சூழ்நிலை தான். ஒன்று படுத்த நிலையில் எங்களை நோக்கும் பாவனையில் இருந்தது. ஏனைய இரண்டும் அங்குமிங்குமாகத் திரிந்த நிலையில் இருப்பதைக் கண்டோம். இக்காட்சி எங்கள் மனதிற்கு நல்ல விருந்து.

(6) கங்காரு ஒடிக்கொண்டிருந்த நிலையில் மூன்று கங்காருகளைக் கண்டு மகிழ்ந்தோம்.

1. Dallus Zoo 2. Wilds of Africa 3. Zoo-North

4. Children’s Zoo 5. Giraffe