பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 0 141

சும்மா இருப்பாரா? மறுநாளே திருக்கோட்டியூர் திருக்கோவில் கோபுரத்தின் மீது ஏறி ஊர்ப் பெருமக்கள் அனைவரையும் ஒருங்கே திரண்டு வருமாறு கூவினார். அனைவரும் வந்து திரண்ட பிறகு தாம் “ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லியதை அனைவரையும் ஒரே குரலாக திருப்பிச் சொல்லுமாறு பணித்தார். இங்ஙனம் பல முறை சொல்லப் பெற்றது.

இதனைச் செவிமடுத்தநம்பி, சீடன் இராமாநுசர் மீது சினங்கொண்டு தம்மிடம் வருமாறு பணித்தார். “சீடனே, நான் எச்சரித்தும் ஏன் இம்மந்திரத்தை அனைவருக்கும் சொன்னாய்? இதனால் விளையும் பலன் தெரியுமா ?” என்று சினத்துடன் வினவினார். கருணைக் கடலாகிய இராமாநுசர், “அடியேன் அறிவேன். தாங்கள் தான் இம்மந்திரத்தை ஒரு தரம் சொன்னாலும் வீடுபேறு கிடைக்கும் என்றீர்கள். பிறருக்குச் சொன்னால் நரகம்தான் அடியேனுக்குக் கிடைக்கும் என்று சொன்னதும் நினைவிலுள்ளது. மந்திரத்தைச் சொன்னவர்கள் அனைவரும் வீடுபேற்றை அடைகின்றார்கள் என்பது பற்றி அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அடியேன் ஒருவன் மட்டும் நரகத்திற்குப் போவதில் கவலை இல்லை. தவிர, இந்தப் பலன்கள் யாவும் கீதை வரியின் நல்லுபதேசத்தால் பெற்றவை” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கவே ஆசாரியனின் குறுகிய மனத்தில் புத்தொளி வீசி அது விரிவடைந்தது. மகிழ்ச்சிப் பெருக்கால் இராமாநுசரை நோக்கி, “அருமைச் சீடனே, நீயே பாக்கியவான். உனக்கிருக்கும் விரிந்த கருணையுள்ளத்தைப் பாராட்டுகின்றேன். இதுகாறும் வழங்கி வந்த வைணவத்துவம் இன்று முதல் எம்பெருமானார் தரிசனம்’ (எம்பெருமானார் - இராமாநுசர்) என்று வழங்குவதாகும்” என்று வாழ்த்தி அமைத்தார்.

(2) இராமாநுசர்,யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் கல்வி பயின்ற பொழுது ஆசாரியர் சீடர்களுடன் கங்கைக்கு யாத்திரையாகச் சென்றார். உடையவருக்கும் (இராமாநுசருக்கும்) ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு தோன்றி வளர்ந்து வரும் நிலையில் ஆசாரியர் சீடனைக் கொல்லச் சதித் திட்டம் வகுத்தார். அது இராமாநுசரின் ஒன்றுவிட்ட சகோதரர் எம்பாருக்குத் தெரியவே அவர் அதனின்றும் தம் சகோதரரைக் காப்பாற்றினார்.

(3) இராமாநுசர் துறவி, திருப்பாவை ஒதிக்கொண்டு இல்லம் தோறும் சென்று பிச்சை எடுப்பது வழக்கம்; அன்றன்றைக்குத் தேவையான அளவு வரை எடுத்து அத்துடன் நிறுத்திக் கொள்வார். அதை ஒர் இல்லறத்தில்

8. இரண்டாண்டுகட்கு முன் வைணவமும், தமிழும் என்ற பெயரில் வெளியிட்ட அரிய நூலை

இப்பெருமகனாருக்கு பக்திப் படையலாக்கி ஒரு படியை அவர் திருவடியில் சமர்ப்பித்து தேவஸ்தானத்துக்கு ஒருபடி வழங்கியதை நினைவு கூர்கின்றேன்.