பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 0 143

இன்று முதல் நீ மடப் பள்ளி ஆச்சான். உடையவருக்கு அமுது படைப்பது நின் பொறுப்பு” என்று ஆணையிட்டார். கடுமணலில் தவித்து நிற்கும் சீடர்களின் உள்ளம் குளிர்ந்தது.

(4) அத்துழாய் செயல்: திருப்பாவையை ஒதிக்கொண்டு பிச்சை ஏற்பதாலும் ஆண்டாள் பெருமாட்டியின் மீது ஒப்பற்ற மதிப்பும், பக்தியும் திருப்பாவை மீது மிக்க ஈடுபாடும் கொண்டிருப்பதாலும், உடையவர் ‘திருப்பாவை ஜியர்’ என்று அக்கால மக்களால் வழங்கப் பெற்றார். மடாதிபதியாக இருந்தபோது கூட ஒரு நாள் இவ்வாறு திருப்பாவையை ஒதிக்கொண்டு வரும்போது தம் ஆசாரியப் பெருமான் திருமாளிகை முன் வர நேர்ந்தது. உந்துமதகளிற்றன் (திருப். 18) என்ற பாசுரமும் அவர் தம் திருவாயினின்றும் புறப்பட்டுக் கொண்டிருந்தது. திருப்பாவையில் ஆண்டாள் தன் தோழியர் நப்பின்னைப் பிராட்டியாரை எழுப்புவதாக அமைந்த பாசுரம் கற்பனையில் கண்ணன் வாழ்ந்த காலத்தில் கோலச் சிறுமியர் உருக்குமினிப் பிராட்டியாரை எழுப்புவதாக அமைந்த நிகழ்ச்சி ஆண்டாள் தம்மைக் கண்ணன் காலத்தில் வாழ்ந்த ஆயச் சிறுமியர்களில் ஒருத்தியாகக் கருதிக்கொண்டு பாடும் பாசுரம் ஆண்டாள் கற்பனையில் கோகுலச் சிறுமியின் அநுபவத்தைப் பெற்றது போல் இராமாநுசரும் கற்பனையில் கண்களை மூடிக்கொண்டு ஆண்டாள் பெற்ற அநுபவத்தைப்பெற்ற நிலையை மானசீகமாகக் கண்டு மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கின்றார். நம்பிகளின் திருவாசலை நெருங்கி வருவதற்கு முன் பாசுரத்தில் பாதிக்கு மேல் ஒதி முடிந்தது.

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச் செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்

என்ற பகுதி இவர் திருவாயினின்றும் மிடற்றொலியாக வந்து கொண்டிருந்தபோது இவர் நம்பிகளின் திருவாசலை அடைந்து விட்டார்.

இச்சமயத்தில் திருமாளிகையினுள்ளே பந்தும் கையுமாக விளையாடிக் கொண்டிருந்தாள் திருமணமாகாத அத்துழாய் என்ற பெரிய நம்பிகளின் திருமகள். கதவு தாளிடப் பெற்றிருந்தது. பந்தார் விரலி ... வந்து திறவாய்” என்ற பாசுர அடிகள் காதில் விழும் நிலையில் பந்தும் கையுமாக இருந்த அப் பெண்மணி பளிச்சென்று கதவைத் திறந்தாள். பந்தார் விரலி என்று பாசுரம் அதே கோலத்தோடு கையில் பாத்திரத்தில் அரிசியும் கொண்டு மணிக் கதவம் தாள் திறந்த பெண்மணி இராமாநுசரின் மானசீகமான திருக் கண்களுக்கு நப்பின்னைப் பிராட்டியாகவே இலக்காயினாள்.