பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146 ◆ என் அமெரிக்கப் பயணம்


என்ற அடிகளில் காணப்பெறும் குறிப்பால் அறியப்பெறுவது. உரையாசிரியர்கள் இக்குறிப்பிற்கு நல்ல விளக்கம் தந்துள்ளனர்.

கதை இது ஒரு வைதிக அந்தணனுக்கு நான்கு பிள்ளைகள். முதல் பிள்ளை பிறந்து பூமியில் விழுந்ததும் காணப்பெறவில்லை. இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகளின் நிலைமையும் அப்படியே. பெற்றவளும் கூட முகத்தில் விழிக்கப்படாதபடி இன்னவிடத்தில் போயுள்ளது என்பது தெரியாமல் காணவொண்ணாது மூன்று பிள்ளைகளும் போனதனாலே நான்காம் பிள்ளையைக் கருவுயிர்க்கப்போகும் தருணத்தில் வந்து இந்த ஒரு பிள்ளையையாயினும் பாதுகாத்துத் தந்தருள வேண்டும்” என்று கண்ணபிரானை வேண்டிக்கொண்டான் அந்த வைதிகன்.

கண்ணபிரானும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டான்; வாக்கும் தந்தான். கருவுயிர்க்கும் நிலை வரும்போது தன்னிடத்தில் வந்து தெரிவிக்குமாறு பணித்தான். இந்த நிலையில் ஒருநாள் வந்தான். ஆனால், அன்று ஒரு வேள்வியில் தான் தீட்சிதனாக இருக்க வேண்டியவனாக இருந்தான். அருகிலிருந்த பார்த்தன் தான் போய் இரட்சிப்பதாக வாக்கும் தந்து அந்தணனையும் கூட்டிக்கொண்டு கருவுயிர்க்கும், இடத்திற்கு வந்தான். அந்த இடத்தைச் சுற்றி ஈ, எறும்பு கூட நுழைய முடியாதபடி ‘சரக்கூடம் அமைத்தான். தானும் அதன் வெளிப்புறத்தில் காத்துக் கொண்டு நின்றான். அன்று பிறந்த பிள்ளையும் வழக்கப்படி மாயமாய் மறைந்தது. அதனால் மிக்க சோகமடைந்த அந்தணன், அர்ச்சுனனை நோக்கி, ‘அதமனே, உன்னாலன்றோ இப்பிள்ளையையும் இழக்கும்படி நேரிட்டது. வற்புறுத்தியிருந்தால் கண்ணனே வந்து காத்திருப்பான்.நீயன்றோ அதனைத் தடுத்தாய்” என்று நிந்தித்து அவனைக் கண்ணபிரானிடம் இழுத்துக்கொண்டு வந்தான்.

கண்ணபிரான் அவர்களைக் கண்டு முறுவலிக்கின்றான். மாயக் கண்ணனல்லவா ? அந்த முறுவலில் ஆயிரம் பொருள் இருக்கும். “பார்த்தனை விடு; உனக்குப் பிள்ளை தானே வேண்டும். நானே கொண்டு வந்து தருகின்றேன்” என்று அருளிச் செய்கின்றான். அந்தணரையும் தேரில் ஏற்றிக்கொண்டு தானும் தேரேறி, பார்த்தனைத் தேரோட்டப் பணித்து பிள்ளையைத் தேடப் புறப்படுகின்றான். தேருக்கும், இருவருக்கும் தன் சங்கற்பத்தால் திவ்விய ஆற்றலை அருளுகின்றான். அகில உலகமும் தேடுகின்றனர். இறுதியில் தனது நிலமான பரமபதத்திற்கு வருகின்றான். விரஜை நதிக்கு இப்பால் தேரை நிறுத்தி அவர்களிருவரையும் அதிலே இருக்கச் செய்து விட்டு தான் மட்டும் உள்ளே புகுகின்றான். அங்கு தன் மூன்று தேவிமார்களையும் நான்கு பிள்ளைகளையும் காண்கின்றான். தமது