பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை◆157


திருவுள்ளம் பற்றுகிறார் போலும்; இதனால் தான் கோவிந்தா என்று கிருஷ்ணனை நினைந்து பேசுகின்றார் என்று உரையாசிரியர் கருதுவது அற்புதம். இது நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

(18) கீதை-திருவாய்மொழி கற்றவர்க்கு மரியாதை நண்ணா அசுரர் நலிவு எய்த (திருவாய். 10.7 : 5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி’ என்பதிலும், ‘என் சொல்லி’ (திருவாய். 7.9 : 2) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில்

என்சொல்லால் யான்சொன்ன
இன்கவி என்பித்துத்
தன்சொல்லால் தான்தன்னைக்
கீர்த்தித்த மாயன்


என்பதிலும் இது வருகிறது. தான் பாடாமல் இவரையிட்டுப் பாடுகிறது ஏன்? என்னில்: தான் பாடினானாகில் கீதையொடு ஒத்துப்போம். கீதையைக் காட்டிலும் இது உயர்ந்தது என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம்: கீதையைக் கற்றான் ஒருவன் காலை நேரத்தில் ஒரு சபைக்குச் சென்றால் பலரும் ஒன்று கூடி நாழி அரிசியைத் தருவார்கள். அவனை நம்ப மாட்டாமையால் ‘புறத்திண்ணையில் கிட’ என்பார்கள். திருவாய் மொழியைக் கற்ற ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால் எல்லோரும் புறப்பட்டுச் சென்று எதிர்கொண்டு அழைத்து வந்து வீட்டில் ஒரு பகுதியை ஒழித்துத் தந்து அமுதுபடியும் சமர்ப்பித்து உபசரிப்பார்கள் என்று நம்பி திருவழுதி நாடுதாசர் எடுத்துக் காட்டுவார். ஆனால் கீதைக்குச் சிறப்பு இல்லையே என்று வினாவினால் உண்டு என்பதே விடை நம்மாழ்வாரும் ‘பண்டே பணித்த (திருவாய். 10.4 9) என்ற பாசுரத்தில் அங்கீகரித்துள்ள படியால் கீதை தானும் வீறுபெற்றது என்பதையும் அறிகின்றோம்.

(19) பரமபதத்தில் வித்தினேன் காண்: இது பற்றிய குறிப்பு ‘நல்ல கோட்பாட்டுலகங்கள்’ (திருவாய், 8.10 : 1) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் வருவது. எம்பெருமானார் திருவனந்தபுரத்துப் பயணத்தைப் பெரும் பாகவதக் கூட்டத்தோடு மேற்கொண்டபோது திருக்கோட்டியூரில் செல்வநம்பி (பாண்டிய அரசனின் அமைச்சர்)யின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அமுது படைக்க அரிசி இல்லை. செல்வ நம்பியும் ஊரில் இல்லை. மழை பெய்தால் விளைவிப்பதற்கு விதை நெல் இருந்தது. வருந்தியழைத்தாலும் வரமாட்டாத மகாபாகவதோத்தமர்கள் தாமாக வந்தருளினார்களே என்று குதுகலம் கொண்டார் செல்வ நம்பியின் தேவி