பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 0 என் அமெரிக்கப் பயணம்

கொண்டிருந்த இராமாநுசரைக் கண்டதும் பிறிதொரு பையன் மேலும் இரண்டொரு கோடுகளைக் கிழித்து ஜீயரே, இதோ உம்முடைய பெருமாள்!” என்று காட்டுகிறான். இராமாநுசரும் அருகில் வந்து பார்க்கிறார். மற்றொரு சிறுவன் அதோ பெருமாளின் திருவாழி, திருச்சங்கு!’ என்று கட்டிக் காட்டுகிறான். உடனே இராமாநுசர்,

தமர் உகந்தது எவ்வுருவம்

அவ்வுருவம் தானே

என்று சொல்லிக்கொண்டே அச்சிறுவனின் கீறல்களை நோக்கித் தண்டனிடுகிறார். அவரது திருவுள்ளம் அந்தக் கீறல்களை உண்மையாகவே எம்பெருமானின் திருமேனியாகவே கருதி பிரபத்தி பண்ணி விடுகின்றது.

தமருகந்தது எப்பேர்

மற்று அப்பேர்

அருகிலிருந்த இன்னொரு சிறுவன் ஒரு கொட்டாங்குச்சி'யில் மண்ணை வாரி வைத்துக்கொண்டு சந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்கின்ற மாதிரியே சொல்லிக்கொண்டு வரும்போது ஜியரே!” என்று அருளிப்பாடு சொல்லிக் கூவுகிறான். இராமாநுசரும் நாயிந்தே !’ என்று கோயிலில் சொல்லுவதுபோல் சொல்லிக்கொண்டே நீட்டித் தம் மேலாடையில் அந்த மண்ணைப் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளுகின்றார். சிறுவர்களுக்கு ஒரே குது.ாகுலம்; இராமாநுசருக்கோ பொய்கையாழ்வாரின் இதயத்தையே பார்த்து விட்டது போன்ற பரவசம்!

அமெரிக்க வாழ் தமிழ் மக்களே, எங்கள் மகன், பேரன்மார், பேத்திமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்கா வந்தோம். மேலுலகம் செய்ய வேண்டிய வயதில் மேல் நாடு வந்திருக்கிறோம். இங்குள்ள பேத்திமார் இருவரின் முயற்சியால் இக்கூட்டம் நடைபெற்றது. பொறுமையுடன் என் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தமைக்கு உங்கட்கு என் நன்றி என்றும் உரியது.

இக்கூட்டத்தை மிக்க அன்புடன் கூட்டி எங்களையும், உங்களையும் பார்த்து மகிழச் செய்த திரு. பாலா சுவாமிநாதன் அவர்களின் நன்றியுரை:

“இரண்டு திங்களுக்கு முன் தமிழ்ச் சங்கத்தில் Aduit Talent Show’ நிகழ்ச்சி நடைபெற்றது. நம்மில் பலர் கலந்து கொண்டோம். அதில் நமக்கெல்லாம் மிகவும் பெருமை தான். இன்று அருங்கலைக்கோன்’ தமிழ்ச் செம்மல் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்நம்முன் உரையாற்றியது நமது தமிழ்ச் சங்கத்திற்கே பெருமை சேர்த்திருக்கிறது.

11. திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம்.