பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ◆ என் அமெரிக்கப் பயணம்



டாக்டர் மாதவன் தாம் அதிகவிலையில் புதிய இல்லம் ஒன்று வாங்கியுள்ளதாகவும் அதனைப் பார்வையிட வருமாறும் அழைக்க அவர் விருப்பப்படிபிட்ஸ்பர்க் நகரில் திருக்கோயிலிலிருந்து 10 கல் தொலைவிலுள்ள அவர் இல்லத்திற்கு வருகின்றோம். சுமார் 50 ஆண்டுகட்கு முன்னர் கட்டப் பெற்ற வீடாக இருந்தாலும் புதியது போன்ற பொலிவுடன் இருந்தது. அனைவருக்கும் அன்புடன் காஃபி வழங்கினார். அய்யங்கார் காஃபி அல்லவா? அருமையாக இருந்தது. சுவை நிலையில் அவர் சில கல் தொலைவு வந்து நியுயார்க் வரும் பெருஞ்சாலையை அடைகின்றோம். பெருந்தொலைவு கடந்து ஒரிடத்தில் அரைமணிநேரம் ஒய்வு கொள்கின்றோம். அன்று மட்டிலும் 250 + 20 + 350 = 620 கல் தொலைவு கார் ஒட்டிவந்த களைப்பு இருக்குமல்லவா? ஒய்விற்குப் பிறகு எங்கள் பயணம் தொடங்கியது. இரவு 12 மணிக்கு இல்லம் வந்தடைந்தோம்.

இத்திட்டத்தில் கார் சென்ற தொலைவு:நியுயார்க்கிலிருந்து பஃபலோ நகர் வரை 430 கல்; முதல்நாள் இரவு அருவிகளைப் பார்த்துவர 50 கல்; அடுத்தநாள் பகலில் செல்ல 20கல், கோட் தீவிலிருந்து சுழல் குட்டை, மின்சார உற்பத்தி இடம் முதலானவை பார்த்து வீடு திரும்ப 30 கல்; பஃபலோ நகரிலிருந்து திருவேங்கடவன் கோயில் வரை 250 கல்; அங்கிருந்து டாக்டர் மாதவன் இல்லம் வரை 10 கல்; அங்கிருந்து பெருஞ்சாலை வரை 10 கல்; அங்கிருந்து வீடு வரை 400 கல். ஆக மொத்தம் 430 + 50 + 20 + 30 + 250 + 10 + 10 + 400 = 1200. இவ்வளவு தூரப் பயணத்தில் செலவும் அதிகம்; உடல் தளர்ச்சியும் அதிகம். அன்புடன் இவ்வளவு தொலைவு காரை ஒட்டி வந்த என் மகனின் களைப்பு மிக அதிகம்.

திருவேங்கடவனின் சேவை அனைத்தையும் மறக்கச் செய்துவிட்டது. நாம் அவனால் இயக்கப்பெறும் கருவிதானே!